/indian-express-tamil/media/media_files/2025/04/25/Bprv7pLYOQqnNw8OPrpx.jpg)
2025 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தின் இரண்டு கொள்கைக் கூட்டங்களில் அதன் ரெப்போ விகிதத்தை மொத்தம் 0.50% (50 அடிப்படை புள்ளிகள்) குறைத்துள்ளது. ரெப்போ ரேட் என்பது நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான விகிதமாகும். இதன் மூலம் அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளும் கடன்கள் மற்றும் வைப்பு நிதிகள் மீதான விகிதங்களை குறைத்தன.
ஒரு சாதாரண நடைமுறையாக, வங்கிகள் மலிவான விலையில் பணத்தைப் பெறும்போது, அவை அவற்றின் வட்டி விகிதங்களையும் குறைக்கின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக்குப் பிறகு இதுதான் நடந்தது. கடன் வாங்கியவர்கள் இதனால் பயனடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் தங்கள் பணத்தை டெர்ம் டெபாசிட் அல்லது சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்தவர்கள், வட்டி விகிதங்கள் குறைவதை பார்க்கிறார்கள். இது, அவர்களின் வைப்பு நிதி வருமானம் மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்பு விகிதங்களை பாதிக்கிறது.
பெரும்பாலான பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வைப்பு நிதி வட்டி விகிதங்களை கடுமையாகக் குறைத்திருந்தாலும், சில ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இன்னும் மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகையில், ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 7.75 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டியும் வழங்குகிறது.
இக்யூடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 8.05 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டியும் வழங்குகிறது.
இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 7.75 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டியும் வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டியும் வழங்குகிறது.
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 8.60 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 9.10 சதவீத வட்டியும் வழங்குகிறது.
உத்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 8.50 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 9.10 சதவீத வட்டியும் வழங்குகிறது.
உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 8.05 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டியும் வழங்குகிறது.
24 ஏப்ரல் 2025 அன்று அந்தந்த வங்கியின் இணையதளத்தில் இருந்து இந்த தகவல்கள் எடுக்கப்பட்டன.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பாதுகாப்பானதா?
சிறு வங்கிகள் அதிக வட்டி கொடுக்கும்போது, அதில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி பல முதலீட்டாளர்களின் மனதில் எழுகிறது.
ஆம், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் பாதுகாப்பானவை தான். ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பொதுவாக புதிய நிறுவனங்களாகும்.
இவையும், மற்ற பெரிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளைப் போல ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, தேவையான பாதுகாப்பு நிபந்தனைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.
நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானத்தை விரும்பினால், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் வைப்பு நிதிகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.