ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ரெப்போ விகிதத்தில் குறைப்பு வட்டி விகிதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகள் கடன் வாங்கும் விலையைக் குறிக்கும் ரெப்போ வீதம் வீழ்ச்சியடைவதால், வங்கி நிலையான வைப்பு திட்டங்களின் வட்டி வீதமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பாரத ஸ்டேட் வங்கி நிரந்தர வைப்பு (FD)
ஒரு வருடம் முதல் 3 வருடங்களுக்கு குறைவான காலஅளவுள்ள நிரந்தர வைப்புகளுக்கு எஸ்பிஐ 5.5 சதவிகித வட்டியை வருடத்துக்கு வழங்குகிறது. அதே போல் 3 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவுள்ள நிரந்தர வைப்புகளுக்கு எஸ்பிஐ 5.7 சதவிகிதம் வட்டியை வருடத்துக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவிகிதம் வழங்கப்படுகிறது. இந்த விகிதங்கள் மே 12, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.
எஸ்பிஐ Wecare எப்டி (SBI Wecare FD)
முத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு ’எஸ்பிஐ Wecare எப்டி’ எஸ்பிஐ யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போதுள்ள 50 bps க்கு மேல் கூடுதல் பிரீமியமாக 30 bps மூத்த குடிமக்களுக்கு அவர்களின் சில்லறை TD யில் ‘5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு மட்டுமே செலுத்தப்படும். இந்த சிறப்பு நிரந்தர வைப்பு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதாவது 30 செப்டப்மர் 2020 வரை மட்டுமே கிடைக்கும்
ஐசிஐசிஐ வங்கி நிரந்தர வைப்பு
ஐசிஐசிஐ வங்கி நிரந்தர வைப்புகளைப் பொறுத்தவரை மே 20, 2020 முதல் நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் பின்வருமாறு
ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள்: 5.55 சதவிகிதம்
390 நாட்கள் முதல் 18 மாதத்துக்கு குறைவானது : 5.55 சதவிகிதம்
18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் : 5.75 சதவிகிதம்
2 வருடங்கள் 1 நாள் முதல் 3 வருடங்கள் : 5.75 சதவிகிதம்
3 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்கள் : 5.75 சதவிகிதம்
5 வருடங்கள் 1 நாள் முதல் 10 வருடங்கள் : 5.75 சதவிகிதம்
மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை கூடுதலாக 0.5 சதவிகிதம் டெப்பாஸிட்டர்களுக்கு கிடைக்கும்.
ஐசிஐசிஐ பொற்கால நிரந்தர வைப்பு (ICICI Bank Golden Years FD)
அதிக வட்டி விகித பயன்களைப் பெற ஐசிஐசிஐ வங்கியிலும் ஐசிஐசிஐ பொற்கால நிரந்தர வைப்பு என்ற ஒரு புதிய நிரந்தர வைப்பு உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு மட்டுமானது. இந்த நிரந்தர வைப்பில் ஒருவர் கூடுதல் வட்டி விகிதமாக 0.3 சதவிகிதத்தை பெறுவார்கள்.
சிறு சேமிப்பு திட்டங்கள் (Small savings schemes)
ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டதில் PPF, NSC, KVP, SCSS போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அரசாங்கம் குறைத்தது. தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்க பத்திரங்களின் வருவாயை பொறுத்து அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது. முன்னதாக, 2019-20 நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் 2020 வரை வட்டி விகிதங்கள் மாறாமல் வைக்கப்பட்டன.
PPF வின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.9 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டன 80 அடிப்படை புள்ளிகள் குறைப்பு. மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.6 சதவிகிதத்திலிருந்து 7.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. ஒரு ஆண்டு கால வைப்பில் குறைப்பு 1.4 சதவிகிதம், வட்டி விகிதம் 6.9 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. தபால் நிலைய 5 வருட வைப்புகளுக்கு 6.7 சதவிகிதம் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள், இன்னும் பெரும்பாலான வங்கிகளின் வங்கி நிரந்தர வைப்பு நிதிகளை (FDs) விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இருப்பினும் சிறு நிதி வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தபால் நிலைய நிரந்தர வைப்பு திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்கலாம். எந்த ஒரு நிரந்தர வைப்பு முதலீட்டிலும் நிதியை முதலீடு செய்வதற்கு முன்னர் உங்களுடைய risk profile, வரி அடுக்கு (tax slab) மற்றும் நிதிகளின் பணபுழக்கம் (liquidity of funds) ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.