ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் அனைத்த தரப்பு வயதினராலும் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகின்றன. இந்த முதலீடுகளில் ஆபத்து குறைவு மற்றும் ஸ்திரைத்தன்மையை காரணம். இந்த நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் வட்டி விகிதம்
வ.எண்
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
அதிகப்பட்ச வட்டி (%)
1 ஆண்டு வட்டி (%)
01
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.00
7.25
02
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
8.20
03
இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
6.00
04
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
8.25
05
நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
7.00
06
சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.65
6.85
07
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
8.25
08
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
7.85
09
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
8.00
நிலையான வைப்புத்தொகை நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கிய காரணிகள் உள்ளன. சில நேரங்களில் எஃப்.டி வட்டி விகிதங்கள் மாறுபடலாம். மேலும், கூடுதலாக, ஆபத்தைக் குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் உங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்துவது புத்திசாலித்தனம். இதுமட்டுமின்றி, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளின் ஒட்டுமொத்த வருமானத்தை மதிப்பிடும்போது பணவீக்கம் மற்றும் வரி தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவதும் அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“