ஃபிக்ஸட் டெபாசிட்: வருமானத்தை அதிகரிக்க இப்படியும் வழிகள் இருக்கு!

Best Ways To Increase Returns On Fixed Deposits Tamil News: நிலையான வைப்பு தொகைகளிலிருந்து உங்கள் வருமானத்தை அதிகரிக்க சில வழிகளை இங்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.

Fixed Deposits Tamil News: Best Ways To Increase Returns On Fixed Deposits

Fixed Deposits Tamil News: நிலையான வைப்புகளில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரத்தில் வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக இருப்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் சுமார் 6% வருமானத்தைப் பெற்றால், உங்களை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுங்கள்.

பல முதலீட்டாளர்கள் பொருளாதாரத்தில் வட்டி விகிதங்கள் படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் நிலையான வைப்புகளிலிருந்து உங்கள் வருமானத்தை அதிகரிக்க சில வழிகளை இங்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.

அதிக வரவு – குறிப்பிட்ட வட்டி விகிதம்

தபால் அலுவலகத் திட்டங்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களை ஒருங்கிணைக்க முனைகின்றன. அதே நேரத்தில் வங்கிகள் ஒவ்வொரு காலாண்டிலும் அவற்றை கூட்டுகின்றன. அதாவது உங்கள் வருமானம் அல்லது வரவு அதிகமாக இருக்கும். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவோம்.

ஒரு வருடத்திற்கு நீங்கள் ரூ .1,000 ஐ முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதற்காக 10% வட்டி சம்பாதிக்கிறீர்கள். முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு வங்கிகள் என்ன செய்யும் என்பது, நீங்கள் சம்பாதித்த ரூ .25 ஐச் சேர்த்து, அடுத்த காலாண்டில் வட்டி 1,025 ரூபாயைக் கணக்கிடுவீர்கள்.

எனவே, அடுத்த காலாண்டில் 10% கணக்கிடப்பட்ட இன்டர்செட் ரூ .1,025 ஆக இருப்பதால் உங்கள் வரவு அதிகமாக இருக்கும். இருப்பினும், தபால் அலுவலகத் திட்டங்களில் இது நடக்காது. அங்கு சம்பாதித்த வட்டி ஆண்டு முடிந்த பின்னரே கூட்டுகிறது. இது வரவை குறைக்கிறது.

வங்கியின் நிலையான வைப்பு தொகையை மட்டும் நம்பக்க கூடாது

நீங்கள், வங்கியின் நிலையான வைப்பு தொகையை மட்டும் நம்பி இருக்க கூடாது. மாறாக, வங்கி வைப்புகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். உண்மையில், நிறுவனத்தின் நிலையான வைப்புத்தொகையும் ஒரு நல்ல வழி. எடுத்துக்காட்டாக, பஜாஜ் நிதியத்தின் நிலையான வைப்பு ஆண்டுக்கு 6.75% வட்டி விகிதத்தை அளிக்கிறது, ஆனால், எஸ்பிஐ உங்களுக்கு அதிகபட்சமாக 5.5% வட்டி விகிதத்தை வழங்கும், அதுவும் 5 ஆண்டு கால அவகாசம் எனவே, தபால் அலுவலக நேர வைப்பு உட்பட பல்வேறு விருப்பங்களைத் தேடுங்கள்.

முதலீட்டிற்கான பிற விருப்பங்களில் மாற்ற முடியாத கடனீடுகள் மற்றும் கடன் பரஸ்பர நிதி திட்டங்களும் அடங்கும்.

வரி சலுகைகளை வழங்கும் மற்ற முதலீடு சார்ந்து விருப்பங்களை தேடுங்கள்

நீங்கள் பெறும் இரண்டு வகையான வரி சலுகைகள் உள்ளன. முதலாவது வருமான வரிச் சட்டத்தின் Sec80C இன் கீழ் வரி சலுகைகள் ஆகும். அங்கு முதலீடு செய்யப்பட்ட தொகை மொத்த வருமானத்திலிருந்து அதிகபட்சமாக ரூ .1.5 லட்சம் வரை கழிக்கப்படுகிறது. பிபிஎஃப், வங்கி வரி சேமிப்பு நிலையான வைப்பு கருவிகள், என்எஸ்சி போன்ற கருவிகள் இந்த நன்மையை உங்களுக்கு வழங்குகின்றன.

மற்றொன்று, கருவிகளில் இருந்து சம்பாதிக்கும் வட்டி முதலீட்டாளர்களின் கைகளில் வரி விலக்கு. எனவே, நீங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. பிபிஎஃப், யுலிப்ஸ் மற்றும் வரி இல்லாத பத்திரங்கள் போன்ற கருவிகள் இந்த வகையின் கீழ் வரும் சில கருவிகள் ஆகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சில நிலையான வைப்புக்கள் நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்தால் ஓரளவு கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனவே, இது போன்ற கருவிகளைத் தேடுங்கள். நீங்கள் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்றால் 0.10 அல்லது 0.25% அதிக வட்டி கூட வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

நிறுவனத்தின் நிலையான வைப்பு விஷயத்தில் வலுவான AAA மதிப்பிடப்பட்ட வைப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fixed deposits tamil news best ways to increase returns on fixed deposits

Next Story
இந்த 4 பணிகளுக்கு மட்டும் தான் வங்கியில் அனுமதி: எஸ்பிஐ முக்கிய அறிவிப்புSBI Bank Alert Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com