Fixed deposits with many benefits details here: ஃபிக்ஸட் டெப்பாசிட்களின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது பாதுகாப்பான முதலீடாக இருப்பதோடு, நிலையான வருமானத்தை அளிக்கிறது. ஆனால், ஃபிக்ஸட் டெப்பாசிட்களில் முதலீடு செய்வதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
வருமான வரியைச் சேமிக்க பலரும் பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் தரும் முதலீட்டை விரும்புகிறார்கள். அத்தகைய பாதுகாப்பான முதலீட்டு விருப்பம் நிலையான வைப்பு (ஃபிக்ஸட் டெப்பாசிட்) ஆகும். வரிச் சேமிப்பிற்காக இதில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீட்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும்.
ரூ5 லட்சம் வரை உத்தரவாதம்
ஃபிக்ஸட் டெப்பாசிட் என்பது பாதுகாப்பான முதலீடாகும், ஒருவேளை நீங்கள் டெப்பாசிட் செய்த வங்கி அசாதாரண சூழ்நிலையில் மூழ்கினால், அரசாங்க உத்திரவாதமாக ஃபிக்ஸட் டெப்பாசிட்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.5 லட்சம் வரையிலான உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். வங்கி மூழ்க நேர்ந்தால், ரூ.5 லட்சம் வரை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.
சுகாதார காப்பீடு
HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் DCB வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகையுடன் கூடிய காப்பீட்டை வழங்குகின்றன. இந்த வங்கிகளில் ஃபிக்ஸட் டெப்பாசிட் செய்யும் போது ஹெல்த் இன்ஷூரன்ஸ் இலவசமாகவும் கிடைக்கும்.
கிரெடிட் கார்டு நன்மைகள்
பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெப்பாசிட்களுக்கு ஏற்ப கடன் அட்டைகளை வழங்குகின்றன. ஃபிக்ஸட் டெப்பாசிட் செய்யப்பட்ட தொகையில் 80-85% கடன் வரம்புடன் கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. குறைந்த கிரெடிட் ஸ்கோர் அல்லது கிரெடிட் வரலாறு இல்லாதவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டு செலவுகளின் பாதுகாப்பிற்காக ஃபிக்ஸட் டெப்பாசிட் பயன்படுத்தப்படுகிறது.
முதிர்வுக்கு முன் திரும்பப் பெறுதல்
பணப்புழக்கத்திற்கு ஃபிக்ஸட் டெப்பாசிட் உதவுகிறது. தேவைப்பட்டால், முதிர்வுக்கு முன்பே திரும்பப் பெறலாம். இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு வங்கி உங்களிடம் சில கட்டணங்களை வசூலிக்கலாம்.
இதையும் படியுங்கள்: மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பான ஆதார் அட்டை; டவுன்லோட் செய்வது எப்படி?
வரி விலக்கு
ஃபிக்ஸட் டெப்பாசிட்டில் வரி சேமிப்பு நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், இந்த பலன் அனைத்து ஃபிக்ஸட் டெப்பாசிட்களுக்கும் கிடைக்காது. ஃபிக்ஸட் டெப்பாசிட் மீது 5 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஃபிக்ஸட் டெப்பாசிட்களுக்கான வட்டிக்கு (FD வட்டி விகிதங்கள்) வரி செலுத்த வேண்டியதில்லை.
ஃபிக்ஸட் டெப்பாசிட் மீதான கடன்
ஃபிக்ஸட் டெப்பாசிட் மீது கடன் பெறும் வசதியும் உள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், கடனை உங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தலாம். ஃபிக்ஸட் டெப்பாசிட்டின் மொத்த மதிப்பில் 90% வரை கடன் பெறலாம். ஃபிக்ஸட் டெப்பாசிட் மூலம் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் உங்கள் முதலீட்டில் நீங்கள் பெறும் வட்டியை விட 1-2% அதிகமாகும். அதாவது, நீங்கள் ஃபிக்ஸட் டெப்பாசிட்க்கு 4% வட்டி பெறுகிறீர்கள் என்றால், 6% வட்டியில் கடனைப் பெறலாம்.
உத்தரவாதமான வருமானம்
உத்தரவாதமான வருமானம் ஃபிக்ஸட் டெப்பாசிட்டில் கிடைக்கும். முதலீட்டின் ஆரம்பத்திலேயே, முதிர்வு காலத்தில் அதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.