/tamil-ie/media/media_files/uploads/2018/11/mla-1-4.jpg)
Flight Ticket Offers
விமான சேவையில் புதிய புதிய ஆஃபர்களால் மக்களை கவர்ந்து வரும் இண்டிகோ நிறுவனம் தற்போது உள்ளூர் விமான சேவையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
Flight Ticket Offers : பொங்கல் சிறப்பு சலுகை:
சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த முன்னணி விமான சேவை நிறுவனங்களும் நீ.. நான் என போட்டிப்போட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதற்காக விமான நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களை அதிகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வரிசையில், இண்டிகோ நிறுவனம் கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்காக ரூ. 899க்கு உள்ளூர் விமான பயணத்தை அறிவித்து பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது குளிர்கால ஆஃபர்களை அறிவித்துள்ளது .அதன்படி, தற்போது டிக்கெட்டின் ஆரம்ப விலையாக 899 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இண்டியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த ஆஃபர், டிசம்பர் 6, 2018 முதல் ஏப்ரல் 15, 2019 வரையில் பயண தேதியில் பயணம் மேற்கொள்ளுவோருக்கு மட்டுமே. நீங்கள் இந்த ஆஃபரை பெற முன்பதிவு செய்ய வேண்டும்.
பயண இடங்களைப் பொருத்து உள்ளூர் பயணங்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 899 ரூபாய், சர்வதேச பயணங்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 3,199 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை – தூத்துக்குடி இடையேயான பயணத்துக்கு 2,299 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை-சென்னை இடையேயான பயணங்களுக்கு 1,299 ரூபாய் என்றும் கோவை-சென்னை இடையே 1,599 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை-பெங்களூரு-ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் குறைந்த விலை சலுகை வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.