/tamil-ie/media/media_files/uploads/2020/10/AP20249657729295.jpg)
flights ticket price flight ticket booking
flights ticket price flight ticket booking : . தீபாவளி நெருங்குவதையொட்டி பயண டிக்கெட்களின் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைவரும் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக உள்ளனர்.பண்டிகை காரணமாக பயணிகள் வரத்து அதிகமானதால் நேற்று முதல் 200 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 100 விமானங்கள் செல்வதற்கும், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் வரவும் உள்ளன. மத்திய அரசு அதிகபட்சமாக 60 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதியளித்து உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு, சாதாரண நாட்களில் வழக்கமாக, 2,800 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கட்டணம் இருக்கும். தற்போது, அந்த கட்டணம் இருமடங்காக அதிகரித்து, 6,௦௦௦த்தை தாண்டியுள்ளது. முதல் வகுப்பு கட்டணம், 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது
சென்னயில் இருந்து துாத்துக்குடிக்கு, 3,௦௦௦ ரூபாயாக இருந்த கட்டணம், 5,௦௦௦ முதல், 7,௦௦௦ ரூபாய் வரை உயர்ந்துள்ளதுதிருச்சிக்கு, 2,500 ரூபாயாக இருந்த கட்டணம், 4,௦௦௦ முதல், 7,௦௦௦ ஆயிரம் ரூபாய் வரையும், சேலத்திற்கு, 2,300 ரூபாயாக இருந்த கட்டணம், 3,900 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இதேபோல, டில்லி, ஐதராபாத், பூனே, கோல்கட்டா, மும்பை, அகமதாபாத், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமான கட்டணங்களும், பண்டிகையை ஒட்டி அதிகரித்துள்ளது.
இதுபோன்ற பண்டிகை காலங்களில், குறைந்த விலை டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனையாவது இயல்பானது தான். பண்டிகையை காரணம் காட்டி, டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில்லை என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் இதுவரை அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 180 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.