ஃப்ளிப்கார்டின் வியக்க வைக்கும் ஆஃபர்கள்!

ஆப்பிள் வாட்ஸ் சீரியஸ், ஆப்பிள் ஐபேட் போன்றவற்றிலும் அதிரடியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னணி ஹாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், ஆப்பிள் நிறுவன ஃபோன்களின் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்து விற்பனை செய்கிறது.

ஆன்லைன் ஷாப்பிங் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அடிக்கடி , வாடிக்கையாளர்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்கள், விலைக் குறைப்பு, இஎம் ஐஆஃபர் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம் . அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை, ’ஆப்பிள் டே சேல்ஸ்’ ஃப்ளிப்கார்டில் கொண்டாடப்படுகிறது.

இந்த சேலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ஃபோன்களின் விலை நம்ப முடியாத அளவில் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் எக்ஸ், ஐபோன் 7, ஐபோன் 6, போன்ற அந்நிறுவனத்தின் முக்கியமான மாடல்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.97,999 க்கு இந்தியாவில் அறிமுகமான ஐபோன் எக்ஸ், ஃப்ளிப்கார்டில் ரூ. 82,999 க்கு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ரூ. 65,999 க்கு அறிமுகமான ஐபோன் 8 ஃப்ளிப்கார்டின் ஆப்பிள் டே சேலில் ரூ. 54, 999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 64ஜிபி கொண்ட ஆப்பிள் ஐபோன் 8 மொபைல் பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்களளை தவிர, ஆப்பிள் வாட்ஸ் சீரியஸ், ஆப்பிள் ஐபேட் போன்றவற்றிலும் அதிரடியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

×Close
×Close