Flipkart Big Billion Days 2024: பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் இந்தாண்டிற்கான தள்ளுபடி விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பல்வேறு சலுகைகளுடன் இந்த விற்பனை செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்.
ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட பெருட்களுக்கு பெரும் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்.30 தொடங்கும் நிலையில், பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்.29ம் தேதி விற்பனை தொடங்குகிறது. கடந்தாண்டு அக்டோபர் 8-ல் விற்பனை தொடங்கிய நிலையில் இந்தாண்டு அதிக பயனர்களை கவரும் வகையில் செப். இறுதியில் விற்பனை தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“