பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்!

மோட்டோ Z2 போர்ஸ் போன்கள் 34 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடைத்தைப் பெற்றிருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

Flipkart Big Billion Days sale : பிக் பில்லியன் டேஸ்!

ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் சேல்’ இந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ஆம்  தேதி வரை நடைபெறுகிறேது. 4 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு  சலுகையில்வாடிக்கையாளர்களுக்கு பல சர்ப்பிரைஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அக்டோபர் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து இந்த அதிரடி சேல் தொடங்குகிறது. இந்த ஆண்டு விற்பனையில் நோக்கியா, சாம்சங், ஹானர், எல்.ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் மொபைல் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ Z2 போர்ஸ் போன்கள் 34 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, அதே போல ஹானர் 10 போன்கள் 24 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் மோட்டோ Z2 பிலே போன்கள் 17 ஆயிரத்து 499 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஸியோமி போக்கோ F1 போன்கள் 10 முதல் 20 சதவிகித சலுகையுடன் இந்த நாட்களில் விற்கப்படும். மேலும் ரெட் மீயின் பல பிரபலமான போன்களிலும் இந்த ஆஃபர் தரப்பட உள்ளது.

லேப்டாப்புகளில் 40-50% சலுகையும், மின்னணு பொருட்கள் மீது 80% சலுகை வரை ஃப்ளிப்கார்ட் தர உள்ளதாக தெரிகிறது. இதற்கான விளம்பரங்களும், ப்ரொமோக்களும் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக  அமேசான் நிறுவனமும் கிரேட் இந்தியன் சேலை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close