ஃபிளிப்கார்ட்டின் தீபாவளி ஆஃபர் இன்று தொடங்கியது. கிட்டத்தட்ட 90% வரை ஆஃபர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பில்லியன் டேவை விட இந்த விற்பனையில் சலுகை இன்னும் அதிகமாகவும், தள்ளுபடிகள் நிறையவும் இருக்கும் என்று தெரிகிறது.
Advertisment
Flipkart BIG DIWALI SALE
பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்றே (அக். 12) ஆரம்பமாகிறது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் (அக்.13) ஆரம்பமாக உள்ளது. 5 நாட்களுக்கு இந்த சலுகைகள் தொடரும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட் தீபாவளி ஆஃபரில், எஸ்.பி.ஐயின் கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி 10% தள்ளுபடி இருக்கிறது.
Get the power to do more with the all-new Redmi 8.
டிவி மற்றும் மற்ற பொருட்கள் 75% சலுகையுடன், 50,000 மேற்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே எலக்ட்ரானிக் சம்பந்தமான ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், ஹெட்போன்கள், டி.எஸ்.எல்.ஆர் உள்ளிட்ட பல பொருட்கள் 90% சலுகையுடன் எதிர்பார்க்கலாம் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
Flipkart Big Diwali Sale Mobile Offers
Redmi Note 7 Pro-விற்கு 1,000 ரூபாய் எக்ஸ்சேஞ் தள்ளுபடியில் ரூ. 10,999-க்கு விற்பனையாகும் என தெரிகிறது. Realme C2 அதன் வழக்கமான விலையான ரூ. 5,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இது Diamond Ruby மற்றும் Diamond Sapphire ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
இதேபோல், Redmi Note 7S அதன் ஆரம்ப விலையான ரூ. 10.999-க்கு பதிலாக ரூ. 8,999-க்கு விற்பனையாகும். Realme 5, 1,000-ரூபாய் விலை தள்ளுபடியுடன் 8,999-ரூபாயாகவும், Samsung Galaxy S9 மற்றும் Samsung Galaxy S9+ ஆகியவை ஆரம்ப விலையில் 29.999-ரூபாயாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
Samsung Galaxy A50 விலை 18.490 ரூபாயாகும். விலை குறைப்பில் இந்த போன் 16,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.