ஃப்ளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.. ஐபோன் பரிசு!

Flipkart Deepavali 2018 Offer on Google Pixel 2 XL, Apple iPhone 8, iPhone 6s and more : 100...

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த ஃப்ளிக்கார்ட் தீபாவளி சேலில் ஐபோன் பரிசு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அடிக்கடி , வாடிக்கையாளர்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்கள், விலைக் குறைப்பு, இஎம் ஐஆஃபர் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக விளங்கும் அமேசான் நிறுவனம் சமீபத்தில் தி கிரேட் இந்தியன் வெஸ்டிவல் சேலை தீபாவளியொட்டி அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Flipkart Diwali Sale 2018 : ஃப்ளிப்கார்ட் தீபாவளி சேல்!

இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது தீபாவளி ஆஃபர் சேலை அறிவித்துள்ளது. இந்த அதிரடி சேல்
நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாள் நடைபெறுகிறது. இதில் செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றில் 75 சதவீதம் விரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு அறிவிப்பு என்னவென்றால்,ஃப்ளிப்கார்ட் தீபாவளில் சேலில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. இத்துடன் சேர்ந்து 100 சதவீதம் கேஷ்பேக் ஆஃபரும் உண்டு.

மேலும், ஸ்டேட் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுலாக 10% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிக்கார்டின் இந்த அதிரடி தீபாவள்ளி சேலை ஆவலுடன் எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close