நாளை மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் ஃப்ளிப்கார்ட்!!! என்னவாக இருக்கும்??

விளம்பரம் வெளியான நாள் முதல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுக் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாளை மிகப்பெரிய  அறிவிப்பை  வெளியிட இருப்பதாக ஃப்ளிஃப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்லது.  இதுக் குறித்த எதிர்ப்பார்பு வாடிக்கையாளர்கள் மக்த்தியில் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அடிக்கடி , வாடிக்கையாளர்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்கள், விலைக் குறைப்பு, இஎம் ஐஆஃபர் என பல்வேறு சலுகைகளை வழங்கி வருவது வழக்கம் .

அதே போல் முன்னணி ஸ்மார்ஃபோன்களுக்கு விலைக் குறைப்பு, அதிரடி சலுகைகள்,  கேஷ்பேக் ஆஃபர்கள் போன்றவற்றையும் அந்நிறுவனம்  மாதந் தோறும் அறிவிக்கும். அந்த வகையில், தற்போது ஃப்ளிஃப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தின் படி,  நாளைய தினம், (17. 4.18) ஃப்ளிப்கார்ட் நிறுவனம்,  தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு  வெளியிட போகிறதாம். இந்த விளம்பரம் வெளியான நாள் முதல்  வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுக் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், ஃப்ளிப்கார்டின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், இதுக் குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் ஏப்ரல் 17 ஆம் தேதி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முக்கியமான அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும்,  ஏபரல் 17  மதியம் 12 மணி வரை   வாடிக்கையாளர்கள் பொறுமையாக காத்திருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவ்ப்பு கண்டிப்பாக மொபைல் குறித்ததாக தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close