Advertisment

ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் 35 வது ஆண்டு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து 4வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

author-image
WebDesk
New Update
Forbes 35th annual list of worlds billionaires, worlds billionaires list, Mukesh Ambani dethrones Jack Ma in Asia, India has world’s third highest no of billionaires, ஃபோர்ப்ஸ், ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர்களின் பட்டியல், எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெஃப் பெசோஸ், கௌதம் அதானி, SpaceX founder Elon Musk, Amazon CEO and Founder Jeff Bezos, goutham adani, Forbes worlds billionaires list

அமெரிக்கா, சீனாவை அடுத்து உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். அவர், சீனாவின் தொழிலதிபர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார்.

Advertisment

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 35வது ஆண்டு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து 4வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக அவரது நிகர மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பிடித்துள்ளார். இவர் டாலர் அடிப்படையில் அதிக லாபம் ஈட்டியவர். எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ஒரு ஆண்டுக்கு முன்பு 126.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அவர் 31 வது இடத்தைப் பிடித்திருந்தபோது அவருடைய சொத்து மதிப்பு 24.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இருந்தது.

“இதற்கு முக்கிய காரணம் டெஸ்லா பங்குகளில் 705 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் ஆசியாவின் செல்வந்தராகவும் அம்பானி உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார். 84.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அவர் மீண்டும் பிடித்துள்ளார்.

அம்பானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக ஆகியுள்ளார். 84.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 10 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்த சீனாவின் ஜாக் மாவை அவர் தாண்டியுள்ளார். கடந்த ஆண்டு 17வது இடத்தில் இருந்து அவருடைய சொத்து மதிப்பு 48.4 பில்லியன் அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்த போதிலும் ஜாக்மாவின் இடம் 26ஆக குறைந்தது” என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரரான அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, 50.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 24 வது இடத்தில் உள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பூனவல்லா குழுமத்தின் தலைவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 169வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்தின் நிகர மதிப்பு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் பூனவல்லா 7வது இடத்தில் உள்ளார். எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார், இந்தியாவின் 3வது மிகப்பெரிய பணக்காரராகவும் உலக அளவில் 71வது இடத்திலும் உள்ளார். அவருடைய சொத்தின் நிகர மதிப்பு 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

“மூன்று மிகப் பெரிய பணக்கார இந்தியர்கள் மட்டும் அவர்களுக்கு சொத்துகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடியுள்ளது” என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் அதிகமாக 724 கோடீஸ்வரர்கள் உள்ளனர் (கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 614ஆக இருந்தது). சீனாவில் 698 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 456ஆக இருந்தது.

“சீனாவில் கிடைத்த லாபங்களின் விளைவாக, பெய்ஜிங் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது. அது நியூயார்க் நகரத்தை தாண்டிவிட்டது” என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா 140 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 136 கோடீஸ்வரர்களையும், ரஷ்யா 117 கோடீஸ்வரர்களையும் கொண்டுள்ளது.

ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 1,149 கோடீஸ்வர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்றும், அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் என்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக அளவில் இந்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் 106 பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள். இதில் மிகவும் வயது குறைந்த இளம் கோடீஸ்வரர் ஜெர்மனியைச் சேர்ந்த 18 வயதான கெவின் டேவிட் லெஹ்மன் ஆவார். அவருடைய தந்தை குந்தர் லெஹ்மன் தனது மருந்துக் கடை தொடர்புகள் டி.எம்-ட்ரோஜெரி மார்க்கெட்டை தனது மகனுக்கு மாற்றினார். அவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலக பணக்காரர்களின் பட்டியலில் 925வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் மிகம் வயது முதிர்ந்த கோடீஸ்வரர் 99 வயதான அமெரிக்க காப்பீட்டு அதிபர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.

ஃபோர்ப்ஸ் 35 வது ஆண்டு உலக செல்வந்தர்களின் பட்டியலில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,755 - 660 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்தம சொத்து மதிப்பு 13.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த பட்டியலில் 493 புதியவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். “ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீஸ்வரரும் இதில் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து 210 மற்றும் அமெரிக்காவிலிருந்து 98 பேர் புதிதாக பதிவாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூயிஸ் வுய்ட்டன் மற்றும் செபோரா உட்பட 70 பிராண்டுகளின் சாம்ராஜ்யத்தை மேற்பார்வையிடும் பிரெஞ்சு கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட், 150 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய 3வது பணக்காரராக உள்ளார். அவரைத் தொடர்ந்து, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பில் கேட்ஸ் (அமெரிக்க டாலர்) 124 பில்லியன்), அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் (அமெரிக்க டாலர் 97 பில்லியன்). இடம்பெற்றுள்ளனர்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் மொத்தமாக 1.15 டிரில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 686 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்துள்ளது. மொத்தத்தில், ஐரோப்பாவின் கோடீஸ்வரர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணக்காரர்களாகியுள்ளனர்.

இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்களில் டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக், ஆர்செலர் மிட்டல் லட்சுமி மிட்டல், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்வி மற்றும் பாரதி எண்டர்பிரைஸ் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் மிட்டல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mukesh Ambani Forbes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment