Advertisment

சென்னை ஃபோர்டு நிறுவனம் விற்பனை: டாடா உள்பட 3 பேர் இடையே போட்டி

ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து இரண்டு மூன்று நிறுவனங்கள் அதன் சொத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hyundai Motor to invest 2 45 bn dollors in Tamil Nadu over next 10 years to increase EV production

ஃபோர்டு நிறுவனம் அதன் சென்னை தொழிற்சாலை விற்பனை தொடர்பாக 3 நிறுவனங்களிடம் பேசிவருகிறது.

ஃபோர்டு நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை விற்பதற்கான முயற்சிகளை, கடந்த ஆண்டு முடித்துக்கொண்டது. சில முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் யூனிட்டை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் வேகம் எடுத்ததாகத் தெரிகிறது.

Advertisment

இது குறித்து தமிழக அரசின் தொழில்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து இரண்டு மூன்று நிறுவனங்கள் அதன் சொத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக எங்களுக்கு தெரியவந்தது.
மாநிலத்துக்கான முதலீடாக இருக்கும் என்பதால், ஆர்வம் காட்டுபவர்களுடன் பரிவர்த்தனையை எளிதாக்குவோம்” என்றார்.

அந்த நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் ஃபோர்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. 99 வருட குத்தகையில் மற்ற தொழில்துறை அலகுகளைப் போலல்லாமல், ஃபோர்டு நிலங்களை சொந்தமாக வைத்திருப்பதால், அமெரிக்க கார் தயாரிப்பாளர் வாங்குபவரைத் தேடுகிறார்.
350 ஏக்கர் நிலத்தில், ஃபோர்டுக்கு 250 ஏக்கர் சொந்தமாக உள்ளது, மீதமுள்ள நிலம் துணை நிறுவனங்களுக்கு சொந்தமானது.

சென்னை யூனிட்டை எளிதாக விற்பனை செய்ய தமிழக அரசு விருப்பம் தெரிவித்திருந்தது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உட்பட பல பெயர்கள் ஃபோர்டின் சென்னை யூனிட்டைக் கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த செப்டம்பரில், ஃபோர்டு இந்தியா நிர்வாகமும் அதன் சென்னை கார் தொழிற்சாலை தொழிற்சங்கமும் - சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் (CFEU), 2,592 நிரந்தர ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தீர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tata Anand Mahindra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment