மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு..பயப்பட வேண்டாம் நீங்கள் வருமான வரி செலுத்த இன்னும் நேரம் இருக்கிறது.

அடுத்த மாதம் 10ம் தேதியாக வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

form 16 download
form 16 download

form 16 download : வருமான வரி என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும். ஒவ்வொருவருக்குமான வருமான வரி அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறும். வருமான வரி தாக்கல் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் வருமான வரியை கட்டியிருக்கின்றீர்கள் என்பதற்கான சான்று அது தான்.

மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய படிவம் 16 (Form 16) வழங்குவதற்கான கெடு தேதியை வரும் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதியாக வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கெடு தேதியை ஜூலை 10ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ள தகவலை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இனி இல்லை!

இதுபோல் நிறுவனங்கள் டிடிஎஸ் விவரங்களை படிவம் 24 கியூ-வில் கடந்த மாதம் 31ம் தேதிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்த கெடு தேதியும் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 24 கியூ படிவத்தில் மே இறுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டது இதை கருத்தில் கொண்டு கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிவம் 16 என்றால் என்ன?

இந்த ஃபார்மினை டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும். இந்த ஃபார்மில் நிறுவனத்தின் PAN மற்றும் TAN எண் இடம் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்வது எப்படி?

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Form 16 itr filing date may get extended as employers

Next Story
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் கனரா வங்கி.. வட்டி மட்டுமே இவ்வளவு!state bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com