14,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கானின் (Foxconn) ஒப்பந்த நிறுவனமான யுஜான் டெக்னாலஜி (இந்தியா) மூலம் ரூ. 13,180 கோடி முதலீடு செய்ய தமிழக அமைச்சரவை செவ்வாயன்று அனுமதி அளித்துள்ளது.
செவ்வாயன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,
தமிழகத்தில் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 14 முதலீட்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சரவையால் அனுமதி அளிக்கப்பட்ட 14 முதலீட்டில் ஃபாக்ஸ்கானின் முதலீடு மிகப்பெரிய முதலீடு ஆகும். 14 திட்டங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.38,698.80 கோடியாக இருந்தது.
பி.சி.பி, லோ டென்ஷன் பேனல்கள், மொபைல் போன் உதிரிபாகங்கள் மற்றும் கேஸ்கள் உற்பத்தி, சொகுசு கார்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள், உயர் ரக கருவிகள் மற்றும் அவற்றின் மென்பொருள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், தோல் அல்லாத காலணி உற்பத்தி, பச்சை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அம்மோனியா உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழகத்தில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசெம்பிளிங் யூனிட்டை அமைக்கும் வகையில் ஃபாக்ஸ்கான் சுமார் $1 பில்லியன் முதலீட்டை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் ஃபாக்ஸ்கானின் யுஜான் டெக்னாலஜி சென்னையில் ரூ13,180 கோடி முதலீடு செய்கிறது. சென்னைக்கு அருகில் உள்ளஃபாக்ஸ்கானின் ஸ்மார்ட்போன் அசெம்பிளி யூனிட்டுக்கு அடுத்ததாக இருக்கும் இ.எஸ்.ஆர் (ESR) ஒரகடம் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பூங்காவில் உள்ள பிளக் அண்ட் ப்ளே வசதியில் ஃபாக்ஸ்கான் சுமார் 500,000 சதுர அடியில் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐகானிக் ஐபோனின் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான், மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் கூட, சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட மாட்யூல்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இந்த யூனிட்டிலிருந்து உதிரிபாகங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“