ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகில் உள்ள அதன் உற்பத்தி ஆலைக்கு அருகில் 60,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் விடுதிகளை கட்டி வருகிறது.
தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் சாதனங்களுக்கான உற்பத்தித் திறனை அதிகரித்து வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய பணியாளர்களை நான்கு மடங்காக உயர்த்த நிறுவனம் விரும்புகிறது. முன்னதாக, சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி நிலையமான Zhengzhou ஆலையில் இடையூறுகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், விடுதி வளாகம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகின்றன.
இந்தியாவில் ஆப்பிளின் உள்நாட்டு விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களின் ஏற்றுமதியில் அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவை நடைபெறுகின்றது.
உலகின் அதிகபட்ச ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் சீனாவில் நிறுவனம் இத்தகைய வசதிகளை ஏற்கனவே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil