SBI Alert: இந்த 2 நம்பரிடம் ஜாக்கிரதை… அவசர எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

குறிப்பாக இந்த 2 நம்பரில் இருந்து கால் வந்தால், அதனை எடுக்க வேண்டாம் என எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

SBI Alert: இந்த 2 நம்பரிடம் ஜாக்கிரதை… அவசர எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கியின் பெயரை உபயோகித்து டிவிட்டர் பதிவுகள், எஸ்எம்எஸ், இ-மெயில் ஆகியவற்றின் மூலமாக மோசடி நடைபெறுவதாக தெரிவித்துளளது.

குறிப்பாக, +91 -8294710946 , +91 -7362951973 ஆகிய இரண்டு நம்பர்களை பட்டியலிட்டுள்ள எஸ்பிஐ, அதிலிருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் சிஐடி விடுத்துள்ள எச்சரிக்கையில், ” எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு +91 -8294710946 மற்றும் +91 -7362951973 ஆகிய எண்களில் இருந்து அழைப்பு வருகிறது. மோசடியான லிங்க் ஒன்றை அனுப்பி அதில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். அதுபோன்ற லிங்க்களை வாடிக்கையாளர்கள் யாரும் கிளிக் செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இதை ரீட்வீட் செய் எஸ்பிஐ வங்கி, இரண்டு நம்பரில் இருந்து மோசடி கால் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் மோசடி அழைப்புகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த எஸ்பிஐ, எங்கள் ஐடி பாதுகாப்பு குழுவினர் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.யூசர் ஐடி, பாஸ்வேர்டு, டெபிட் கார்டு எண், பின் நம்பர், சிவிவி, ஓடிபி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கி விவரங்களை கேட்கும் எஸ்எம்எஸ் / அழைப்புகள் / இ-மெயில் / போலியான லிங்க்-கள் போன்ற எதற்கும் பதில் அளிக்க வேண்டாம்.வங்கி ஒருபோதும் இதுபோன்ற விவரங்களை கேட்பதில்லை என தெரிவித்துள்ளது.

உங்களிடம் வங்கி விவரங்கள் கேட்டு யாராவது தொடர்பு கொண்டால், report.phishing@sbi.co.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டும் புகார் கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Fraud alert sbi warns customers not to entertain these numbers

Exit mobile version