இந்திய தபால் துறை சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.. அதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாகவும், நிறைய லாபமும் கிடைக்கிறது
இந்த திட்டங்களில் சமீப காலமாக அதிகளவில் மோசடி நடைபெறுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
2017 அக்டோபர் மாதம் முதல் தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் மொபைல் நம்பரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, பான் கார்டையும் தபால் நிலைய கணக்குகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் மோசடிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். புதிதாக வெளியிட்டுள்ள வழிமுறைகளை கீழே காணலாம்.
- சேமிப்பு கணக்குகளில் பான் எண், மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்.
- ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போதும், பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.
- தபால் நிலைய கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.
- பான் கார்டு இல்லாத வாடிக்கையாளர்களிடம் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும்.
- ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
- கணக்குதாரர் தங்களுடைய மொபைல் நம்பரை மாற்றுவதாக இருந்தால் அது குறித்து தனியாக எழுதி வாங்க வேண்டும்.
- தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளை மூடும்போது அதற்கான பாஸ்புக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கிவிட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil