scorecardresearch

டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு.. பிப்.1ஆம் தேதி முதல் அமல்

டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கட்டணங்கள் பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

From February 1 DTH and cable TV rates set to rise by 30
புதிய கட்டணங்கள் பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) டிவி சேனல்களின் விலை நிர்ணயம் மீதான புதிய கட்டண உத்தரவு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனால், டிடிஹெச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் நுகர்வோருக்கான டிவி சேனல்களின் விலை சுமார் 30% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், கட்டண உயர்வால் சந்தாதாரர்களை இழக்க நேரிடும் என்று ஆபரேட்டர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
அதில், நுகர்வோருக்கு உகந்த தீர்வு கிடைக்கும் வரை கட்டண உயர்வு உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்துமாறு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீண்டும் டிராயை அணுகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நவம்பரில், டிராய் புதிய கட்டண ஆணை 2.0 ஐ திருத்தியது. கடந்த ஆண்டு, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளரிடம், ஓவர்-தி-டாப் பிளாட்பார்ம்கள் மற்றும் இலவச டிஷ் சேவைகளை ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினர்.
மேலும், இலவசமாகக் கிடைக்கும் சேனல்களை நுகர்வோருக்கு விற்குமாறு ஒளிபரப்பாளர்கள் வற்புறுத்துவதையும் அவர்கள் எடுத்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: From february 1 dth and cable tv rates set to rise by 30