/indian-express-tamil/media/media_files/2025/10/08/mahindra-scorpio-2025-10-08-08-32-02.jpg)
மஹிந்திராவின் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய 7 இருக்கைகள் கொண்ட டீசல் எஸ்.யூ.வி வாகனப் பிரிவில் உள்ள பிரீமியம் தேர்வுகளில் ஒன்றாகும்.
நான்குக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றதாகவும், உங்கள் பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய சிறந்த எஸ்.யூ.வி எது? என்றால் இந்தியாவைப் போன்ற ஒரு மாறுபட்ட சந்தையில், இத்தகைய தேர்வுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் குறைவாகவே உள்ளன. நீங்கள் தேர்வு செய்ய நிறைய எஸ்.யூ.வி-கள் கிடைத்தாலும், 7 இருக்கைகள் கொண்ட ஒரு சிறந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பது சவாலானது. நவீன விபத்துப் பாதுகாப்பு விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்களை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டுப்படுத்துவதால், வழக்கமான பெரிய குடும்ப வாகனத்தைக் காண்பது அரிது.
இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டு பிராண்டுகளான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை பெரிய குடும்ப வாகனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன, மேலும் தேர்ந்தெடுப்பதற்கு சில கவர்ச்சியான எஸ்.யூ.வி-களை வழங்குகின்றன. 2025-ம் ஆண்டிற்கான எங்கள் பகுப்பாய்வு என்னவென்றால், இந்தக் குறிப்பிடத்தக்க பிரிவில் மலிவு விலையை உருவாக்குவதில் மஹிந்திரா & மஹிந்திரா முன்னணியில் உள்ளது. இது போட்டி விலையில் வலிமையான பயன்பாடு மற்றும் உயர் தொழில்நுட்ப வசதியை வழங்குகிறது. மஹிந்திராவின் வண்டிகள், ஆடம்பரத்தை விரும்பி வாங்குபவர்களுக்கு XUV700-ஐயும், சிக்கனமான பட்ஜெட்டில் உள்ளவர்களுக்கு பொலிரோ-வையும் வழங்குகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த வரிசையில் ஒரே ஒரு விருப்பத்தை மட்டுமே வைத்துள்ளது.
மாறிவரும் மாசு உமிழ்வு விதிமுறைகள் இருந்தபோதிலும், டீசல் எஸ்.யூ.வி-கள் அவற்றின் சிறந்த முறுக்குவிசை மற்றும் நீண்ட தூர பொருளாதாரத்தின் காரணமாகவே தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
எனவே, இங்கே அவற்றின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட தற்போதைய ஐந்து மிகவும் மலிவான விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புறப் பயன்பாடு முதல் நகர்ப்புற ஆடம்பரம் வரையிலான பல்வேறு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்திய உற்பத்தியின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
1. மஹிந்திரா பொலிரோ / பொலிரோ நியோ
ஆரம்ப விலை: ரூ. 8.79 லட்சம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/mahindra-bolero-2025-10-08-08-36-57.jpg)
மிகவும் மலிவான 7 இருக்கைகள் கொண்ட டீசல் எஸ்.யூ.வி பிரிவில் முதலிடத்தில் இருப்பது பழைய பாணியிலான மஹிந்திரா பொலிரோ மற்றும் அதன் நவீன புதிய வடிவமைப்பு பொலிரோ நியோ ஆகும். பொலிரோ ஒரு உண்மையாகவே ஒரு குதிரைபோல நன்றாக உழைக்கும் வாகனம். இது கிராமப்புற சந்தையின் சவாலான நிலைமைகளுக்கும் பயன்பாட்டிற்கும் மட்டுமே வடிவமைக்கப்பட்ட, வலுவான, எந்தக் குழப்பமும் இல்லாத கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நம்பகமான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது வலிமையானது, எளிமையானது, நிரூபிக்கப்பட்ட நீடித்து உழைக்கும் தன்மையை மையமாகக் கொண்டுள்ளது. இதில் நவீன பிரீமியம் அம்சங்கள் இல்லாவிட்டாலும், அதன் குறைந்த பராமரிப்பு செலவு, தொந்தரவு இல்லாத வாகனப் பயணத்திற்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.
2. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்
ஆரம்ப விலை: ரூ. 12.98 லட்சம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/scorpio-classic-2-2025-10-08-08-37-58.jpg)
புகழ்பெற்ற ஸ்கார்பியோ கிளாசிக் இரண்டாமிடத்தில் உள்ளது. அதன் காலத்தால் அழியாத வடிவமைப்பு மற்றும் அடிப்படை வலிமையை மதிக்கும் விசுவாசமான வாடிக்கையாளர்களை இது தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி நிரூபிக்கப்பட்ட 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வலுவான, மதிப்புமிக்க ஒரு வாகனமாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது. நம்பகமான உதிரி பாகங்கள் விநியோகச் சங்கிலி மற்றும் எளிதான சேவை ஆகியவற்றுடன், பெஞ்ச் ஸ்டைல் மூன்றாவது வரிசை இருக்கைகளைக் கொண்ட ஸ்கார்பியோ கிளாசிக் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. மிக முக்கியமாக, அதன் பிரிவில் உள்ள வேறு எந்த எஸ்.யூ.வி-யும் ஸ்கார்பியோவைப் போல சாலையில் பிரம்மாண்டமாக செல்வதை வெளிப்படுத்த முடியாது.
3. மஹிந்திரா ஸ்கார்பியோ-என்
ஆரம்ப விலை: ரூ. 13.20 லட்சம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/mahindra-scorpio-n-2025-10-08-08-38-54.jpg)
பழைய பாணியிலான வலிமை உங்களுக்குத் தேவையில்லை என்றால், மஹிந்திராவின் ஸ்கார்பியோ-என் ஒரு நம்பகமான 7 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி-க்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது சக்திவாய்ந்த 2.2 லிட்டர் எம்-ஹாக் ஜென்2 (m-hawk Gen2) டீசல் எஞ்சினை இரண்டு வெவ்வேறு சக்தி மற்றும் முறுக்குவிசை வெளியீட்டு நிலைகளில் வழங்குகிறது. 4×4 திறன் விருப்பங்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இரண்டையும் கொண்ட ஸ்கார்பியோ-என், ஒரு நம்பமுடியாத நடுத்தர அடுக்கு தேர்வாகச் செயல்படுகிறது. இது அதன் கிளாசிக் மாடலை விட சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் உட்புறத்தை வழங்குகிறது. 7 பேர் கொண்ட குடும்பத்தை மிகுந்த வசதி மற்றும் ஆடம்பரத்துடன் பயணிக்கச் செய்ய, ஸ்கார்பியோ-என் பரிசீலிக்கத்தக்கது.
4. மஹிந்திரா XUV700
ஆரம்ப விலை: ரூ. 13.66 லட்சம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/mahindra-xuv700-ebony-4-2025-10-08-10-25-53.jpg)
மஹிந்திரா XUV700 ஆனது 7 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி-க்கு ஒரு வித்தியாசமான அம்சத்தை வழங்குகிறது. மேலும், இது மிகவும் ஆடம்பரமான பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.ஏ.எஸ் - ADAS (மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள்) மற்றும் டேஷ்போர்டில் இரட்டை ஒருங்கிணைந்த திரைகள் ஆகியவை XUV700-ன் சில முக்கிய அம்சங்களாகும். இதன் மேம்பட்ட 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் வலுவான செயல்திறனை வழங்குகிறது, இதன் உயர் ட்யூன் (tune) 185 hp மற்றும் 450 Nm முறுக்குவிசையை அடைகிறது. சக்திவாய்ந்த, அம்சங்கள் நிறைந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எஸ்.யூ.வி-யை, குடும்ப வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாங்குபவர்களுக்கு, XUV700 நம்பமுடியாத மதிப்பை வழங்குகிறது.
5. டாடா சஃபாரி
ஆரம்ப விலை: ரூ. 14.66 லட்சம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/08/tata-harrier-safari-adventure-x-5-2025-10-08-10-26-29.jpg)
டாடா மோட்டார்ஸின் ஒரே 7 இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி புதிய தலைமுறை சஃபாரி ஆகும். சஃபாரி ஒரு அதிநவீன மற்றும் பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது 2.0 லிட்டர் கிரியோடெக் (Kryotec) டர்போ-டீசல் எஞ்சினை நம்பியுள்ளது, இது 170 PS சக்தியை உருவாக்குகிறது. உட்புறத்தில், சஃபாரி பிரீமியம் தொழில்நுட்ப அம்சங்களின் நீண்ட பட்டியலையும், மூன்றாவது வரிசையில் இருப்பவர்களுக்கு கூட வசதியான வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளையும் வழங்குகிறது. டாடா மோட்டார்ஸ் அடிக்கடி புதிய வண்ணங்கள், புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட டிரிம் (trim) விருப்பங்கள் வடிவில் புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. இருப்பினும், மஹிந்திராவின் போட்டியாளர்களைப் போல சஃபாரி 4-வீல் டிரைவ் (4x4) அமைப்பை ஒரு விருப்பமாக வழங்குவதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.