உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதற்கும், அடுத்த ஆண்டு முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும் ஆண்டு இறுதி சரியானது ஆகும்.
ஏனெனில், வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.
நீங்கள் வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வருமானத்தையும் தரக்கூடியதும், பாதுகாப்பான வரிச்சலுகை திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்கும் PPF என்பது நீண்ட கால வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு பல தவணைகள் அல்லது மொத்த முதலீடு மூலம் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
உங்கள் முதலீட்டின் பன்முகத்தன்மையுடன், இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். தற்போது, PPF முதலீட்டின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது.
வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள்
அதிக வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன.
இந்தத் திட்டங்கள் திட்டங்கள் பிரிவு 80C இன் கீழ் வரி-சேமிப்பு நன்மைகளை வழங்குகின்றன. இதனால், இவை வரி-சேமிப்பு பரஸ்பர நிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ELSS மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)
NPS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் வரி-சேமிப்பு திட்டமாகும், இது ரிஸ்க்-எதிர்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்கு ஏற்றது.
இந்தத் திட்டம் பிரிவு 80CCD இன் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரி விலக்கு பெற அனுமதிக்கிறது - பிரிவு CCD (1) இன் கீழ் ரூ.1.5 லட்சம், மற்றும் பிரிவு CCD (1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்.
காப்பீட்டுத் திட்டங்கள்
காப்பீடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத திட்டமாக காணப்படுகிறது. இதில் சில பாலிசியின் பிரீமியத்துக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதி (PF)
ஓய்வூதிய திட்டமிடலுக்கு ஏற்ற மற்றொரு வரி சேமிப்பு திட்டம் வருங்கால வைப்பு நிதி ஆகும். பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிக்கும் ஊழியர்கள் பிரிவு 80C இன் கீழ் வரி தள்ளுபடிக்கு தகுதி பெறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.