/indian-express-tamil/media/media_files/2025/08/23/youngest-millionaire-2025-08-23-16-32-55.jpg)
13 வயதில் டிரேடிங், 19 வயதில் ரூ.500 கோடி சொத்து: இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்! யார் இந்த ஜதின் ராவ்?
ஆடம்பர கார்களின் கதை பெரும்பாலும் பணம் படைத்தவர்களின் வாழ்க்கையைக் கூறும். ஆனால், ஒருசில கதைகள் மட்டுமே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இந்தியாவின் இளம் கோடீஸ்வரரும், லாம்போர்கினி கார் உரிமையாளருமான ஜதின் ராவ் டிரேடிங் மூலம் ஈட்டிய லாபத்தில் மட்டுமே லம்போகினி காரை வாங்கியுள்ளார் என்பதுதான் அவரது கதையின் சிறப்பு.
தற்போது 19 வயதாகும் ஜதின், பலரும் கனவு காணும் வாழ்க்கையை தனது இளம் வயதிலேயே அடைந்துள்ளார். அவர் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதுடன், கோடீஸ்வரராகவும் உள்ளார். மேலும், சொந்தமாக ஒரு லாம்போர்கினி காரையும் வைத்துள்ளார். இவை அனைத்தும் அவருடைய கடின உழைப்பு மற்றும் உறுதியான மனப்பான்மையின் அடையாளங்கள்.
ஜதின் ராவின் பயணம் அவர் 13 வயதில் வர்த்தகத்தைத் தொடங்கியபோதே ஆரம்பமானது. பெரும்பாலான இளம் பருவத்தினர் பள்ளி மற்றும் பொழுதுபோக்குகளில் மூழ்கியிருந்தபோது, ஜதின் ஷேர்மார்க்கெட் பற்றிப் படித்தும், டிரேடிங் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார்.
17 வயதிலேயே, இந்தியாவின் இளம் கோடீஸ்வர வர்த்தகர் என்ற அரிய மைல்கல்லை எட்டினார். சரியான மனநிலையுடன் அணுகினால், வர்த்தகம் என்பது செல்வத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்பதை அவரது வெற்றி நிரூபித்துள்ளது. இன்று, 19 வயதில், ஜதின் ராவ் சுயமாகச் சம்பாதித்த பல கோடி ரூபாய் சொத்துக்களுடன், சுமார் 500 கோடி ரூபாய்க்கும் (62 மில்லியன் டாலர்) அதிகமான நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.
சரியான மனநிலை, தொடர் முயற்சி, கற்றல் மற்றும் ஒழுக்கம் இருந்தால், டிரேடிங் மூலம் மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு அவரது பயணம் சிறந்த உதாரணம். அவரது வயதில் பலர் என்ன தொழில் செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கும்போது, அவர் தனக்கென வெற்றிகரமான பாதையை உருவாக்கி, கோடீஸ்வரர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். 17 வயதில் கோடீஸ்வரரான ஜதின், 19 வயதில் இந்தியாவின் இளம் லாம்போர்கினி உரிமையாளர்களில் ஒருவராகவும், சிறந்த தொழில்முனைவோராகவும் உயர்ந்தார். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட டிரேடர்களுக்கு வழிகாட்டியதற்காக, 'ஆண்டின் இளம் வர்த்தக வழிகாட்டி' என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
ஜதின் ராவ் எந்த வயதில் கோடீஸ்வரர் ஆனார் என்று பலரும் ஆச்சரியப்படலாம். அவரது வெற்றிப் பயணத்தில் 13 வயதில் வர்த்தகத்தைத் தொடங்கினார். 17 வயதில் கோடீஸ்வரர் ஆனார். 19 வயதில் லாம்போர்கினி காரை சொந்தமாக்கினார். 19 வயதில் நிகர சொத்து மதிப்பு 62 மில்லியன் டாலருக்கும் அதிகமானது. (சுமார் ரூ. 500 கோடி) இவை அனைத்தும் அவரை இந்தியாவின் இளம், சுயமாகச் சம்பாதித்த பல கோடி ரூபாய் செல்வந்தர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.
ஜதினின் சாதனைகள் வர்த்தகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. 19 வயதில், அவர் பல வணிக முயற்சிகளிலும் கால் பதித்து, தனது வருமான ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி, தனது தொழில்முனைவோர் மனப்பான்மையை நிரூபித்துள்ளார். இளம் வயதில் லாம்போர்கினிக்கு சொந்தக்காரராக இருப்பது, லட்சியம் மற்றும் வெற்றிக்கான அடையாளமாக அவரை மாற்றியுள்ளது. ஆனால் அதைவிட முக்கியமாக, சரியான மனநிலையுடன் இருந்தால், ஒரு இளைஞனும் நிதி சுதந்திரம் கொண்ட ஒரு தலைவராக வளர முடியும் என்பதை இது காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.