/tamil-ie/media/media_files/uploads/2023/03/fujiyama.webp)
புஜியாமா நிறுவனத்தின் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள்
புஜியாமா நிறுவனம் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.49,499 முதல் ரூ. 99,999 வரை ஆகும்.
மேலும், இ-ஸ்கூட்டர்களின் வரம்பில் நான்கு குறைந்த வேக மாடல்கள் உள்ளன. அவை, ஸ்பெக்ட்ரா ப்ரோ, ஸ்பெக்ட்ரா, வெஸ்பார், தண்டர் மாதிரிகள் மற்றும் ஒரு அதிவேக மாடல்: ஓசோன் ஆகும்.
இந்நிறுவனத்தின் கூற்றுப்படி ஸ்கூட்டரின் மோட்டார் சக்தி வாய்ந்தது ஆகும். மேலும் மின்சார நுகர்வும் குறைவு. 40+ கிமீ சவாரிக்கு 2-3 யூனிட்கள் மட்டுமே செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வரும் மாதங்களில், நிறுவனம் இரண்டு இ-பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில், முதலாவது கிளாசிக் இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 69,999 ஆகும். இது 160 கி.மீ. வரை செல்லும்.
அடுத்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் 99,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வணிக ரீதியாக மூன்று சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தவும் புஜியாமா திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, புஜியாமா சில கவர்ச்சிகர சலுகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.