Bank holiday | 2024 மே மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வங்கி விடுமுறை நாள்கள் இருப்பதால் உங்களின் திட்டங்களில் சிலவற்றை நீங்கள் மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் இருக்கும் மாநிலத்தைப் பொறுத்து விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மாறுபடும். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறைப் பட்டியலின்படி, மே 1, 2024 அன்று, மே தினம் காரணமாக முக்கிய நகரங்களில் வங்கிச் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும்.
மே மாத வங்கி விடுமுறை தினங்கள்
- மே 1: மகாராஷ்டிரா தினம் மற்றும் மே தினம் (தொழிலாளர் தினம்). மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், ஆந்திரா, தெலங்கானா, மணிப்பூர், கேரளா, மேற்கு வங்கம், கோவா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வங்கி மூடப்படும்.
- மே 7: மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
- மே 8: ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படும்.
- மே 10: பசவ ஜெயந்தி/அக்ஷய திரிதியாவை முன்னிட்டு கர்நாடகாவில் வங்கிகள் மூடப்படும்.
- மே 11: இரண்டாவது சனிக்கிழமையன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- மே 13: லோக்சபா தேர்தல் காரணமாக ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
- மே 16: மாநில நாள் சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
- மே 23: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
- மே 25: மக்களவைத் தேர்தல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக அகர்தலா மற்றும் புவனேஸ்வரில் வங்கிகள் மூடப்படும்.
- மே 5, 12, 19 மற்றும் 26: ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்படும்.
எனினும், அனைத்து நாள்களிலும் ஆன்லைன் வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள் மாதம் முழுவதும் செயலில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“