scorecardresearch

வாட்ஸ்அப்பில் எல்.ஐ.சி சேவை.. எதெல்லாம் கிடைக்கும், எப்படி பயன்படுத்துவது?

எல்ஐசி வாட்ஸ்அப் எண் 8976862090, சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் எல்ஐசி வழங்கும் சேவைகளின் பட்டியலை பார்க்கலாம்.

How to use LIC WhatsApp service
எல்ஐசி வாட்ஸ்அப் சேவை

ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பாலிசிதாரர்களின் நலனுக்காக வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. எல்ஐசி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி வாட்ஸ்அப் சேவைகள் கிடைக்கும்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில்,
“எல்ஐசி போர்ட்டலில் தங்கள் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள், மொபைல் எண். 8976862090 இல் “ஹாய்” என்று கூறி வாட்ஸ்அப்பில் இந்த சேவைகளைப் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளது.

எல்ஐசி வாட்ஸ்அப் சேவை

எல்ஐசி வாட்ஸ்அப் எண் 8976862090. எல்ஐசி போர்ட்டலில் பதிவுசெய்த பாலிசிதாரர்கள் மட்டுமே எல்ஐசியின் வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

எல்ஐசி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவது எப்படி,?

எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8976862090க்கு “ஹாய்” என்று கூறி, காப்பீட்டாளர் வழங்கும் வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப்பில் எல்ஐசி சேவைகளின் முழு பட்டியல்

வாட்ஸ்அப்பில் கிடைக்கும் எல்ஐசி சேவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) பிரீமியம் நிலுவை
2) போனஸ் தகவல்கள்
3) பாலிசி நிலை (ஸ்டேடஸ்)
4) கடன் தகுதி
5) கடன் திருப்பி செலுத்துதல்
6) கடன் வட்டி நிலுவை
7) பிரிமீயம் பெய்டு சான்றிதழ்
8) யூலிப் அறிக்கைகள்
9) எல்ஐசி சேவை இணைப்புகள்
10) சேவையை தொடர்பு கொள்ளுதல்

வாட்ஸ்அப்பில் இலவச கிரெடிட் ஸ்கோர்

சமீபத்தில், எக்ஸ்பீரியன் இந்தியா கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ ஒரு சேவையை அறிவித்தது, இது வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் கிரெடிட் ஸ்கோரை இலவசமாக சரிபார்க்க அனுமதிக்கிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நிதி நிறுவனம் எல்ஐசி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Full list of lic services on whatsapp

Best of Express