தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பரவலாக பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்ய, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் பூண்டு வருவது குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரிகள் கூறுகையில், கோயம்பேடு சந்தைக்கு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வரும்.
இந்த மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரித்து பூண்டு விலை படிப்படியாக குறையும் என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“