Advertisment

2021ல் அதிக சொத்து சேர்த்த அதானி; 49 பில்லியன் டாலருடன் உலக அளவில் முதலிடம்

உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு; 2021ல் அதிகம் சொத்து சேர்த்தவர்களில் முதலிடத்தில் அதானி; ஜெஃப் பெசோஸ், எலன் மாஸ்கை விட அதிகம்

author-image
WebDesk
New Update
2021ல் அதிக சொத்து சேர்த்த அதானி; 49 பில்லியன் டாலருடன் உலக அளவில் முதலிடம்

Gautam Adani adds $49 bn wealth in 2021, higher than Jeff Bezos, Elon Musk: இந்தியாவின் மற்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி, கடந்த ஆண்டு தனது செல்வத்தில் 49 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளார். இது முதல் மூன்று உலக கோடீஸ்வரர்களான Elon Musk, Jeff Bezos மற்றும் Bernard Arnault ஆகியோர் சொத்து சேர்த்ததை விட அதிகம் என 2022 M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியல் புதன்கிழமை கூறியது.

Advertisment

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வரும் முகேஷ் அம்பானி, 103 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் உயர்ந்து பணக்கார இந்தியராகத் தொடர்கிறார்.

துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரையிலான அதானி குழுமத்தின் தலைவரான அதானியின் சொத்து மதிப்பு 153 சதவீதம் அதிகரித்து 81 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு 1,830 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

HCL இன் ஷிவ் நாடார் அமெரிக்க டாலரில் 28 பில்லியன் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சைரஸ் பூனவல்லா (USD 26 பில்லியன்) மற்றும் எஃகு அதிபர் லட்சுமி N மிட்டல் (USD 25 பில்லியன்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

59 வயதான கௌதம் அதானி, M3M Hurun Global List 2022ல் அதிக லாபம் ஈட்டியவராக உள்ளார். அவர் கடந்த ஆண்டு 49 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது செல்வத்தில் சேர்த்துள்ளார்,” என்று M3M Hurun Global Rich List ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவரது நிகர சொத்து சேர்த்தல் "எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் போன்ற மூன்று உலக கோடீஸ்வரர்களை விட அதிகம்." என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் பட்டியலிடப்பட்ட பிறகு, 2020 இல் அவரது சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலரில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து 81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2021ல் அம்பானியின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது.

நைக்கா நிறுவனர் ஃபல்குனி நாயர் (7.6 பில்லியன் அமெரிக்க டாலர்) M3M Hurun குளோபல் பணக்காரர்கள் பட்டியலில் 2022-ல் புதிதாக நுழைந்த பணக்காரர் ஆவார்.

2022 M3M Hurun Global Rich List ஆனது 2,557 நிறுவனங்கள் மற்றும் 69 நாடுகளில் இருந்து 3,381 பில்லியனர்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.

எம்.டி மற்றும் தலைமை ஆய்வாளருமான அனாஸ் ரஹ்மான் ஜுனைட் கூறுகையில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், தங்கள் செல்வத்தில் குறைந்தது ஒரு பில்லியன் டாலர்களை சேர்த்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் தாக்கம்!

கடந்த 10 ஆண்டுகளில், இந்திய பில்லியனர்கள் சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தங்கள் ஒட்டுமொத்தச் செல்வத்தில் சேர்த்துள்ளனர். இது சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இருமடங்கு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம்!" என்று அவர் கூறினார்.

இந்தியா, உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தையும், உலகின் ‘அறியப்பட்ட’ பில்லியனர்களில் 8 சதவீதத்தையும் கொண்டுள்ளது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 4.9 சதவீதமாக இருந்தது.

1,133 சீன பில்லியனர்கள் மற்றும் 716 அமெரிக்கர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 215 பில்லியனர்கள் உள்ளனர்.

2022ஆம் ஆண்டு பட்டியலில் அதானிதான் அதிக செல்வம் ஈட்டியவர் என்றும், அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் நிறுவனமான எல்விஎம்ஹெச்சின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (39 பில்லியன் டாலர் கூடுதலாக) உள்ளனர்.

சொத்து சேர்த்ததில் அம்பானி 8வது இடத்தில் உள்ளார்.

பட்டியலின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்பானியின் சொத்து மதிப்பு 45 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 20.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. அதானியின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 பில்லியன் டாலர்கள்.

தலா 23 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் ராதாகிஷன் தமானி மற்றும் ஹிந்துஜாவின் எஸ்பி ஹிந்துஜா ஆகியோர் 2022 M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mukesh Ambani Business Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment