உற்பத்தி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) ஏழு ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி 4.7 சதவீதமாக சரிந்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
2018-19 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி, 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
2012-13 ஜனவரி-மார்ச் மாதங்களில் ஜிடிபி 4.3 சதவீதமாக இருந்தது. அதிலிருந்து இந்த டிசம்பரில் ஜிடிபி வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.
முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக திருத்தப்பட்டது. இதேபோல், முதல் காலாண்டு வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக மேல்நோக்கி திருத்தப்பட்டது.
என்எஸ்ஓ வெளியிட்டுள்ள தகவலின்படி, உற்பத்தித் துறையில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (ஜி.வி.ஏ) வளர்ச்சி இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 0.2 சதவீதம் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 5.2 சதவீத அதிகரித்து இருந்தது. இருப்பினும், பண்ணைத் துறையின் ஜி.வி.ஏ வளர்ச்சி 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது.
கட்டுமானத் துறையின் ஜி.வி.ஏ வளர்ச்சியும் முந்தைய 6.6 சதவீத விரிவாக்கத்திலிருந்து 0.3 சதவீதமாகக் குறைந்தது. சுரங்கத் துறை வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 4.4 சதவீதமாக இருந்தது. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள் பிரிவு 0.7 சதவீதம் குறைந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 9.5 சதவீத வளர்ச்சியில் இருந்து.
இதேபோல், ஒளிபரப்பு தொடர்பான வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் சேவைகள் வளர்ச்சி மூன்றாம் காலாண்டில் 5.9 சதவீதமாகக் குறைந்தது. இவைகள் ஒரு வருடம் முன்பு 7.8 சதவீதமாக இருந்தது.
நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகளின் வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகள் 9.7 சதவீத வளர்ச்சியுடன் முன்னேற்றம் கண்டுள்ளன. இவைகள் ஒரு வருடம் முன்பு 8.1 சதவீதமாக இருந்தது.
2019 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் 6.3 சதவீதமாக இருந்தது. நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2011-12) 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.36.65 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.35.00 லட்சம் கோடியாக இருந்தது. இது 4.7 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது என்று என்எஸ்ஓ அறிக்கை கூறுகிறது.
“2019-20 ஆம் ஆண்டில் தற்போதைய விலையில் தனிநபர் வருமானம் ரூ.134,432 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டில் ரூ.1,26,521 உடன் ஒப்பிடும்போது 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, பொருளாதார விவகார செயலாளர் அதனு சக்ரவர்த்தி, பொருளாதார வளர்ச்சியின் சரிவு குறைந்துள்ளதாகக் கூறினார்.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்கள் 2.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் மின்சாரம் உற்பத்தியில் விரிவாக்கம் செய்ய உதவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.