2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் இதே போன்ற பிற வருங்கால வைப்பு நிதி முயற்சிகளுக்கான வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 2, 2024 அன்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, “இதே போன்ற நிதிகளுக்கு 7.1% (ஏழு புள்ளி ஒரு சதவீதம்) வட்டி விகிதத்தில் இருக்கும். 1 ஜனவரி, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை நடைமுறையில் இருக்கும்.
மேலும், ஜனவரி-மார்ச் 2024 காலத்திற்கான 7.1% வட்டி விகிதம் பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22024 ஆம் ஆண்டின் இந்த காலாண்டில் GPF மற்றும் இணைக்கப்பட்ட நிதிகளுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் நிலையானதாக வைத்திருக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு வகை PPF (பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கு ஆகும்.
GPF மீதான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் திருத்தப்படும். இந்த வருங்கால வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதம் பொதுவாக பொது வருங்கால வைப்பு நிதியின் (பிபிஎஃப்) வட்டி விகிதத்தைப் பின்பற்றுகிறது.
அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பொது வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) அளிக்க தகுதியுடையவர்கள். இதன் விளைவாக, ஓய்வுபெறும் போது, பணிக்காலம் முழுவதும் திரட்டப்பட்ட முழுத் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 55 வயது முதல் 60 வயது வரையுள்ள நபர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
EPF வட்டி விகிதம்
ஒவ்வொரு ஆண்டும் EPF வட்டி விகிதத்தை அரசாங்கம் திருத்துகிறது. 2023-24 நிதியாண்டுக்கு, இது 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“