ரயில் பயணிகளுக்கு ஓர் முக்கிய செய்தி! அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வேயில் டிஜிட்டலைசேஷனை மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி, ஆர் வேலட்டை ’ரீசார்ஜ்’ செய்து, அதன்மூலம் எடுக்கப்படும் முன்பதிவில்லா டிக்கெட்டுக்கு 5% போனஸ் கிடைக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 மாதத்துக்கு அதாவது, ஆகஸ்ட் 24, 2019 வரை இத்திட்டத்தை பயணிகளால் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த முன்பதிவில்லா டிக்கெட்டுகளை யூ.டி.எஸ் மொபைல் ஆப் மூலம் தான் புக் செய்துக் கொள்ள வேண்டும். டிக்கெட்டின் டிஜிட்டல் பிரிண்டை மறக்காமல் சேமித்துக் கொள்ளவும்.
ஆர் வேலட்டுகளைத் தவிர்த்து, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், ஆகியவற்றின் மூலமாகவும் முன்பதிலில்லா டிக்கெட்டை புக் செய்துக் கொள்ள முடியும்.
ஒரே நேரத்தில் 4 முன்பதில்லா டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்துக் கொள்ள, இந்த ஆப் அனுமதிக்கிறது. தவிர, பயணிகள் பிளாட்ஃபாம் டிக்கெட்டையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.