5 நிமிடத்தில் இ-பான் கார்டு… குழப்பம் இல்லாமல் வங்கி சேவைகளை பெற இது போதுமே!

instant e-PAN: வருமான வரித்துறையின் இணையதளத்தில் இலவசமாக இ-பான் பெற்றுக்கொள்ளலாம்.

வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. சில சமயங்களில் பான் கார்டு தொலைந்து போகலாம் அல்லது சேதமடைய வாய்ப்புள்ளது. பான் எண் மறந்து போகவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்சனைகளுக்காக வருமானவரித்துறை புதிதாக ஒரு வசதியை உருவாக்கியுள்ளது. இனி பான் கார்டு தேவைப்படுவோருக்கு இ-பான் கார்டு வழங்கப்படுகிறது. இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் அட்டை ஆகும்

இ-பான் பெறுவது எப்படி?

https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமானவரித்துறை இணையதளத்தில் லாகின் செய்யவும்

‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும்

தற்போது பான் எண்ணை பதிவிடவும்

பான் எண் மறந்துவிட்டால், ஆதார் எண்னை பதிவிடவும்

விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்

தற்போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை என்டர் செய்யவும்

விவரங்களை படித்து பார்த்து ‘Confirm’ கொடுக்கவும்

விண்ணப்பதாரரின் இமெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும்

இப்போது இ-பான் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

உடனடியாக பான் கார்டு பெறுவதற்கு கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம். ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Get epan in just few minutes on incometax portal

Next Story
லாக்கரில் உள்ள பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல; வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஆர்பிஐ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com