IRCTC News: ஃப்ரீ ரயில் டிக்கெட்… பிரீமியம் ரயில்வே ஓய்வறை… இந்த கார்டுக்கு இவ்ளோ சலுகையா?

ஐஆர்சிடிசி இணையத்தில் இந்த எஸ்பிஐ ரூபே கிரேடிட் கார்டின் பலன்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஐஆர்சிடிசி இணையத்தில் இந்த எஸ்பிஐ ரூபே கிரேடிட் கார்டின் பலன்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
IRCTC News: ஃப்ரீ ரயில் டிக்கெட்… பிரீமியம் ரயில்வே ஓய்வறை… இந்த கார்டுக்கு இவ்ளோ சலுகையா?

இலவச ரயில் டிக்கெட் முதல் பிரீமியம் ரயில்வே வெயிடிங் ஹால் வரை, ஐஆர்சிடிசியின் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வசதி மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே, ஐஆர்சிடிசி நிறுவனமும், எஸ்பிஐ நிறுவனமும் இணைந்து இந்த கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த கார்டை பெற விரும்புவோர் எஸ்பிஐ கார்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

ஐஆர்சிடிசி இணையத்தில் இந்த எஸ்பிஐ ரூபே கிரேடிட் கார்டின் பலன்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

  1. கார்டு வைத்திருக்கும் நபர் பரிசுப் புள்ளிகளை (Reward points) வைத்து இலவசமாகவே ரயில் டிக்கெட்டை நம்கோ அல்லது தெரிந்தவர்களுக்கு புக்கிங் செய்யலாம்
  2. ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பரிசுப் புள்ளிகளில் 10% வரை வேல்யூ பேக் சலுகை பெற முடியும். ஒரு பரிசுப் புள்ளியின் மதிப்பு 1 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. முதல் 450 நாட்களில் 500 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 350 போனஸ் பரிசுப் புள்ளிகள் கிடைக்கும்.
  4. இந்த கார்டு வைத்திருப்பவர் premium railway lounge வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  5. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் போடும்போது இந்த கார்டை பயன்படுத்தினால் கூடுதல் கட்டணத்தில் (fuel surcharge) 1% தள்ளுபடி கிடைக்கும்.

இந்த கார்டை வாங்குவது எப்படி?

  • முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்திற்கு irctc.co.in செல்ல வேண்டும்.
  • அதில், Promotions' tab-ஐ கிளிக்செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, அதில் SBI credit card ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, ஐஆர்சிடிசி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பெற அப்ளை கொடுக்க வேண்டும்.
  • அதில், கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் காணலாம்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Alert Irctc Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: