Income tax relief : பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பலரின் தேர்வாகவே அமைந்துள்ளது பி.பி.எஃப். முதலீடு. இது உங்களுக்கு தேவையான நிதி பாதுகாப்பை வழங்குவதோடு, வருமான வரி செலுத்தலில் இருந்தும் உங்களுக்கு விலக்கு அளிக்கிறது. பல்வேறு முக்கிய அம்சங்கள் பலரின் விருப்ப தேர்வாக பல ஆண்டுகளாக இந்த திட்டம் இருக்க உதவியுள்ளது என்றும் கூறலாம்.
தற்போது பி.பி.எஃப். உங்களுக்கு 7.1% வரை வட்டி வழங்குகிறது. நீண்ட கால முதலீடாக நீங்கள் இதனை தேர்வு செய்தால் இது உங்களுக்கு லாபகரமான நிதியை திருப்பி செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பி.பி.எஃப். சேமிப்பு கணக்கு துவங்க உதவுகிறது.
நீங்கள் எஸ்.பி.ஐ . வங்கியில் கணக்கு வைத்திருந்தால், ஆன்லைனில் எப்படி நீங்கள் இந்த கணக்கை துவங்கலாம் என்பதை எளிய முறையில் உங்களுக்கு விளக்குகிறது இந்த கட்டுரை.
onlinesbi.com என்ற எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று லாக்-இன் செய்யுங்கள்.
அதில் ரெக்வஸ்ட் மற்றும் என்கொய்ரி என்ற டேப்பை க்ளிக் செய்து புதிய பி.பி.எஃப். கணக்கு என்ற தேர்வை க்ளிக் செய்யவும்.
அதில் பி.பி.எஃப். கணக்கிற்கு விண்ணப்பிக்கவும்.
உங்களின் பெயர், பான் அட்டை எண் மற்றும் முகவரி ஆகியவற்றை உள்ளீடாக தரவும்
பிறகு உங்கள் வங்கிக் கிளையின் எண்ணை தரவும்
உங்களின் வாரிசாக யாரை தேர்வு செய்கிறீர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பெயர் மற்றும் இதர தகவல்களை வழங்கவும்.
பிறகு உங்களின் விண்ணப்ப படிவத்தை பிரின்ட் செய்ய ஓ.டி.பி. ஒன்று உங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
30 நாட்களில் நீங்கள் உங்களின் வங்கிக் கிளைக்கு சென்று உங்களின் அடையாள சான்றுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil