/tamil-ie/media/media_files/uploads/2018/11/idea-38.jpg)
post office schemes
Post Office Saving Scheme Interest Rates upto 8%: இந்திய அஞ்சலகத் துறை சேமிப்பு வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சேமிப்புத் திட்டங்களுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் மாறுபடுகிறது. இங்கே அதனை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போஸ்ட் ஆஃபிஸ் பப்ளிக் ப்ராவிடெண்ட் ஃபண்ட்
இத்திட்டத்தில் வருடத்துக்கு 8 சதவீதம் வட்டி கிடைப்பதாக indiapost.gov.in. தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேமிப்புத் திட்டம் மொத்தம் 15 ஆண்டுகளைக் கொண்டுள்ளது. அதன் பிறகு வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் 5 வருடங்கள் நீட்டித்துக் கொள்ளலாம். போஸ்ட் ஆஃபிஸில் பி.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, வருமான வரிச் சட்டம், 1961 ஆம் ஆண்டின் 80C பிரிவின் கீழ், வருமான வரி விலக்கு பெற முடியும்.
போஸ்ட் ஆஃபிஸ் நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில், அஞ்சலக NSC ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி விகிதம் பெறும். இத்திட்டத்தின் படி, ரூ.100 ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ரூ.146.93 ஆக உயரும்.
அஞ்சலக சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்
சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் திட்டம் வருடத்துக்கு 8.5 சதவீத வட்டியைத் தருகிறது. இத்திட்டத்தின் சேமிப்பு வரம்பு, குறைந்த பட்சம் 1000, அதிக பட்சம் 1,50,000. ஒரு மாதத்தில் இத்தனை முறை தான் சேமிப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற விதி இத்திட்டத்தில் கிடையாது.
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்
இத்திட்டம் வருடத்திற்கு 8.7 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு சேமிப்பு காலம் கொண்ட இத்திட்டத்தை, வாடிக்கையாளர்கள் விரும்பினால் பிறகு 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.