பிளாட் விக்கிறீங்களா? வரிவிலக்கு வேணும்னா இதை செய்யுங்க!

capital gain tax: பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியின் மீது வரி விலக்கினை பெற முடியும்.

பொதுவாகத் தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்று அதன் மூலம் பார்க்கும் லாபத்திற்கு capital gains tax எனப்படும் மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும்.

இப்படி விற்கப்படும் சொத்தானது பழைய வீடாக இருந்தால் அதன் மீதான மூலதன ஆதாய வரியினை வருமான வரிச் சட்டப்பிரிவு 54-ன் கீழ் குறைக்க முடியும். ஆனால் அந்த வீட்டை விற்றதை அடுத்து புதிய வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது முக்கியமானது.

பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியின் மீது வரி விலக்கினை பெற முடியும். எனவே அந்தத் தகுதிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
1) வரி விலக்கு பெற விரும்புபவர் தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும்.
நிறுவனங்கள் போன்றவற்றின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று வரி விலக்கு பெற முடியாது.
2) தனிநபரின் பெயரில் அந்த வீடு நீண்ட காலத்திற்கு அவரிடம் இருந்து இருக்க வேண்டும். (குறைந்தது 3 ஆண்டுகள்)
3) பழைய வீட்டை ஒரு வருடத்திற்குள் விற்று விட்டு புதிய வீடு வாங்க வேண்டும் அல்லது வீட்டை விற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரி மீது விலக்கினை பெற முடியும். அல்லது மூன்று வருடத்திற்குள் புதிய வீட்டினை கட்டும் போதும் வரி விலக்கு கிடைக்கும்.

வருமான வரி சட்டப் பிரிவு 54-ன் கீழ் தனிநபர் ஒருவரால் ஒரு வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது மட்டுமே இந்த வரி நன்மையினைப் பெற முடியும். இது போன்று அவரது வாழ்நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு பெற முடியாது.

வீட்டை விற்ற பிறகு ஒரு வருடத்திற்குள் வீட்டை வாங்கவில்லை என்றால் வருமான வரி செலுத்தும் போது மூலதன ஆதாய டெபாசிட் கீழ் பணத்தினை முதலீடு செய்துவிட்டு 3 வருடத்திற்குள் வீட்டினை வாங்க அல்லது கட்ட வேண்டும். ஒருவேலை வீட்டை விற்ற 3 வருடத்திற்குள் புதிய வீட்டை வாங்கவில்லை என்றால் அந்தத் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்திவிட்டு மீத பணத்தினைத் திரும்பப் பெறலாம்.

நான் ஒரு மாணவன், கடந்த ஆறு மாதங்களில் பங்குகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் ரூ .50,000 லாபம் ஈட்டியுள்ளேன். நான் ஐ.டி.ஆரை தாக்கல் செய்ய வேண்டுமா, அப்படியானால் என்ன படிவம்?

கட்டாயமாக ஐ.டி.ஆர் தாக்கல் என்பது முந்தைய ஆண்டின் மொத்த வருமானம் 60 வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு அடிப்படை விலக்கு வரம்பான ரூ .2.5 லட்சத்தை தாண்டும்போதுதான். உங்கள் மொத்த வருமானம் ரூ .50,000 என்றால், நீங்கள் ஒரு ஐ.டி.ஆர் தாக்கல் செய்யத் தேவையில்லை. இருப்பினும், நீங்கள் ஒரு தன்னார்வ அடிப்படையில் வருமானத்தை தாக்கல் செய்யலாம். நீங்கள் பங்குகளில் வர்த்தகம் செய்து வருவதால், இதன் விளைவாக வரும் வருமானம் ஐடிஆர் படிவம் 3 இல் AY 2021-22 க்கு ‘வணிகம் மற்றும் தொழிலில் இருந்து கிடைக்கும் லாபங்கள் மற்றும் லாபங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Get long term capital gain tax under 54 of income tax

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com