/tamil-ie/media/media_files/uploads/2021/04/indane-lpg-gas-cylinder-1200.jpg)
LPG connection service : ஒரு எல்.பி.ஜி. சிலிண்டர் வாங்குவது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான நடைமுறையாக வெகுநாட்கள் இருந்தது. சில மணி நேரங்கள் வரை அந்த அலுவலகத்தில் காத்திருக்கும் சூழலும் ஒரு காலத்தில் இருந்தது. டிஜிட்டல் பயன்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த சேவைகளை பெறுவதும் மிகவும் எளிதாகிவிட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சமீபத்தில் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த ட்வீட் ஒன்றில், இண்டேன் சிலிண்டர் இணைப்பை ஒரு மிஸ்டு கால் மூலம் பெறலாம் என்று குறிப்பிட்டிருந்தது. 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உங்கள் வீடு தேடி சிலிண்டர் இணைப்பு சேவை வரும் என்று இந்தியன் ஆயில் அறிவித்திருந்தது.
Did you know that your new #Indane connection is just a missed call away? Just give us a missed call to 8454955555 and get #LPG connections at your doorsteps! pic.twitter.com/fSbADSYOCc
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) August 18, 2021
இது போன்ற பல ஸ்மார்ட் சேவைகளை நாம் தற்போது மிஸ்டுகால்கள் மற்றும் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அதே போன்று சிலிண்டர் தீர்ந்துவிட்டால் உடனே 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்தால் உடனே உங்களின் காலியான சிலிண்டருக்கு மாற்று சிலிண்டரும் வழங்கப்படும்.
இது மட்டும் இல்லாமல் இணையம் மூலமாகவும், இந்தியன் ஆயில் ஒன் ஆப் என்ற செயலி மூலமாகவும் உங்களின் புதிய சிலிண்டர் சேவையை பெற்றுக் கொள்ளவும், உங்கள் சந்தேகங்களுக்கு பதிலையும் பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.