எல்ஐசியின் தன் ரேகா திட்டம்: இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) தன் ரேகா கால உத்தரவாதத் திட்டத்தை வழங்குகிறது.
பாலிசிதாரரின் சோகமான சூழ்நிலையில், குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்க திட்டம் உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையான ரூ. 1,00,000 மற்றும் பிற பல நன்மைகளை வழங்குவது ஆகும்.
மேலும், இந்த டெர்ம் பிளான் பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. இதனால், டெர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்திற்காக தேடும் அனைத்து மக்களுக்கும் நெகிழ்வான மற்றும் கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது.
உயர் ஆயுள் காப்பீடு: முதலீட்டாளர் இல்லாத நிலையில் அவர்களது குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இந்தத் திட்டம் மலிவு விலையில் கிடைக்கும் ஒரு திட்டமாகும்.
நெகிழ்வுத்தன்மை: இது பல பிரீமியம் கட்டண விருப்பங்களைக் கொண்டுள்ளது. இப்போது, பாலிசிதாரர்கள் ஒரு பிரீமியம் செலுத்துதலுக்கும் வழக்கமான பிரீமியம் செலுத்துதலுக்கும் இடையே தேர்வு செய்ய முடியும்.
வரிச் சலுகைகள்: வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளுக்கான தகுதி வழங்கப்படுகிறது.
எல்ஐசியின் தன் ரேகா திட்டத்தை 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் எடுத்தக் கொள்ளலாம். திட்டத்தின் முதிர்ச்சி அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசிதாரர்களின் குறைந்தபட்சத் காப்பீடுத் தொகை ரூ. 1,00,000 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/