வங்கிக்கே செல்ல வேண்டியதில்லை; ஆன்லைனில் ரூ.1 கோடி வரை கல்விக்கடன் வழங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பிணையமின்றி (Without Collateral) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பிணையமின்றி (Without Collateral) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Get Rs 1 crore instant educational loan from ICICI : மேற்படிப்பு படிக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்களின் பொருளாதாரம் அதற்கு ஒரு தடையாக இருக்கிறதா? பொருளாதார தடையை கூறி இனி நீங்கள் உங்கள் கல்விக்கான கனவை காண்பதை நிறுத்த வேண்டாம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உங்களின் கல்விக்காக ரூ. 1 கோடி வரை, அதுவும் டிஜிட்டல் முறையில், கடனை வழங்குகிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு நீங்கள் icicibank.com சென்று பார்த்துக் கொள்ளலாம்.
Advertisment
கீழே எவ்வாறு இந்த கடன் வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்காக விளக்கியுள்ளோம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளா ட்வீட் ஒன்றில், உயர் கல்விக்காக ரூ. 1 கோடி வரை கல்விக்கடனை உடனே பெற்றிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இன்ஸ்டான்ட் எஜூகேஷன் லோன் என்பது ப்ரீ அப்ரூவ்ட் லோனாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் ஆவணங்களை சமர்பிக்க அதிகப்படியான பேப்பர் வொர்க்கினை செய்ய வேண்டியதில்லை
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் முன் ஒப்புதல் அளித்து வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பிணையமின்றி (Without Collateral) வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்மைகள்
இந்த லோனை பெறவோ அல்லது அதற்கான ஷாங்ஷன் கடிதத்தை பெறவோ ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிளைக்கு வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டியதில்லை. இணைய சேவை மூலம் மிக எளிமையாக இந்த கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
முன் அங்கீகரிக்கப்பட்ட உடனடி கடன் : வாடிக்கையாளர்கள் தங்கள் முன் ஒப்புதல் பெற்ற கல்வி கடனுக்காக வீட்டிலிருந்தே உடனடி அனுமதி கடிதத்தை பெற முடியும்.
பிணையம் இல்லாமல் கடன் தொகையாக ரூ. 50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வரி சலுகைகள்: கல்விக் கடன் SEC (80E) இன் கீழ் வரி சலுகையுடன் முழுமையான வட்டிக்கு (100%) எந்த உயர் வரம்பும் இல்லாமல் கடனை பெற்றுக் கொள்ளலாம். இது வட்டி விகிதத்தை குறைக்கிறது.
உச்ச வரம்பு : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க மாணவர்கள் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள இயலும். அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலவும், ரூ. 50 லட்சம் உள்நாட்டில் கல்வி கற்கவும் கடனாக பெற்றுக் கொள்ள முடியும்.
முழுக்க முழுக்க இணைய வசதி மூலம் நீங்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பம் அனுப்ப முடியும். சில வாரங்கள் வரை கல்விக் கடனுக்காக அலையும் சூழல் முற்றிலுமாக தவிரிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கொல்லேட்டரல் இன்றி வரும் கடனுக்கான இதர சலுகைகள் என்ன என்று நாம் இங்கே காண்போம்.
9.25 சதவிகிதத்திலிருந்து தொடங்குகிறது இந்த கல்விக்கடனுக்கான வட்டி. இது மிகவும் அதிகமாக இருக்கின்ற போதிலும் வட்டியானது ரெப்போ புள்ளிகளிடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதம் குறையும் போது வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கு தடைகள் ஏதும் இல்லாமல் நீங்கள் உங்களின் கல்விக் கடனை அனுப்ப வங்கிகள் உதவுகிறது. GIC for Canada மற்றும் BLOCK Account for Germany போன்ற சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news