National Pension System Benefits: 60 வயதிற்கு மேலும் சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியெனில், உங்களின் தேர்வு நேசனல் பென்சன் சிஸ்டம் (National Pension System (NPS)) தான். இந்திய அரசின் ஆதரவுடன் இணைந்து செயல்படும் இந்த நேசனல் பென்சன் சிஸ்டத்தில் 18 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவரும் சேர்ந்து பயனடையலாம்.
தனிநபராகவோ, ஊழியர் - நிறுவனம் இணைந்தோ, இந்த நேசனல் பென்சன் சிஸ்டத்தில் இணையலாம். இதற்கான படிவத்தை நிரப்பியபின், கேஒய்சி நடைமுறை நடைபெறும். PFRDA திட்டத்தின் கீழ், இந்த பென்சன் திட்டம் செயல்படுவதால், யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.
இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு, தங்களுடைய ஓய்வு வயதில் எவ்வளவு பணம் கிடைக்கும், பென்சனாக எவ்வளவு கிடைக்கும் என்பதை அதில் உள்ள கால்குலேட்டரின் உதவியுடன் நாமே எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
ஒருவர் தனது 30 வயதில், மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பிரீமியமாக செலுத்த துவங்கினால், அவருக்கு ஓய்வு வயதில் ரூ..45.5 லட்சம் மொத்தமாக கிடைப்பதோடு மட்டுமல்லாது, மாதம் ஒன்றுக்கு ரூ..22,279 பென்சனாக கிடைக்கும்.
அதேநேரத்தில், மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பிரீமியமாக செலுத்த துவங்கினால், அவருக்கு ஓய்வு வயதில் ரூ..91.1 லட்சம் மொத்தமாக கிடைப்பதோடு மட்டுமல்லாது, மாதம் ஒன்றுக்கு ரூ..45,587 பென்சனாக கிடைக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/npas-300x200.jpg)
மாத பிரீமியம் அதிகரிக்க, அதிகரிக்க மொத்தமாக கிடைக்கும் பணம் மற்றும் பென்சன் தொகை கணிசமான அளவு அதிகரிக்கும்.
வரிவிலக்கு
நேசனல் பென்சன் திட்டத்தில் சேர்பவர்களுக்கு, ரூ.50 ஆயிரம் வரிச்சலுகை கிடைப்பதோடு, ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச்சலுகைகளையும் வருமானவரித்துறை சட்டம் 80 சி பிரிவின் கீழ் கிடைக்கும்
இரண்டு வகை பென்சன் திட்டங்கள்
நேசனல் பென்சன் திட்டம் (NPS). இந்த NPS திட்டத்தில் இரண்டு வகை சேமிப்பு கணக்குகள் உள்ளன. Tier 1 மற்றும் tier 2
Tier 1 திட்டத்தில் சேர்ந்திருந்தால் மட்டுமே, tier 2 திட்டத்தில் நாம் இணைய முடியும்.
Tier 1 திட்டத்தில் ஓய்வு வயதிற்கு பிறகே நாம், பணத்தை எடுக்க முடியும்
Tier 2 திட்டத்தில், நாம் விரும்பும் நேரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.