/tamil-ie/media/media_files/uploads/2021/06/978062-five-rupee-note.jpg)
Get Rs 45,000 in exchange of 1 rupee note : உங்களுக்கு அவசரமான பணத்தேவை இருக்கா? அப்பறம் உங்ககிட்ட பழைய காலத்து ஐந்து ரூபாய், 10 ரூபாய் மற்றும் 1, 2 ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்படி இருந்தா இது உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கின்ற நேரம். பழைய ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரூ. 30 ஆயிரம் வரை சம்பாதிக்க வழியுண்டு. உங்களிடம் ட்ராக்டர் புகைப்படத்துடன் கூடிய 5 ரூபாய் பழைய நோட்டு இருந்தால் அதில் 789 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தால் நீங்கள் அதனை ரூ. 30 ஆயிரம் வரை விற்கலாம்.
https://coinbazzar.com/ என்ற இணையத்திற்கு முதலில் நீங்கள் செல்லவும். இந்த இணையத்தில் பழங்கால நாணயங்கள் வாங்கவும் விற்கவும் வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் உண்டு. நீங்கள் உங்கள் பழைய நாணயங்களை விற்க விரும்பினால் இந்த தளத்தில் உங்களின் பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த விற்பனை தளத்தில் மேலும் ஒரு ரூபாய் நோட்டுக்கு கூடுதல் விலை வைக்கப்பட்டுள்ளது. 1977 - 79 காலங்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ரூபாய் நிதித்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் ஹிருபாய் எம். படேலின் கையெழுத்து இருந்தால் நீங்கள் நீங்கள் அதனை ரூ. 45 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடியும்.
ஒரு ரூபாய் நோட்டுகள் ஆங்கில அரசின் போது நவம்பர் 30, 1917ம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு வந்தன. தற்போது அச்சில் அந்த ரூபாய் நோட்டுகள் இல்லை என்றாலும் பழைய ரூபாய் தாள்களுக்கு இந்த இணையம் நல்ல மதிப்பினை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.