/tamil-ie/media/media_files/uploads/2022/03/money-2.jpg)
புதிய கட்டணம் மற்றும் இலவச பரிவர்த்தனை தகவல்கள்
நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தான் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி அமைப்புசாரா திருமணமான தம்பதியர் மாதத்திற்கு ரூ.200 முதலீடு செய்வது மூலம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும்.
இந்தத் திட்டத்தில், இணைய அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன வீட்டுத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், தலை சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், சலவைத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், துவைப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், மற்றும் மாத வருமானம் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள மற்றும் 18-40 வயதுடைய நுழைவு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
குறைந்தப்பட்ச உத்திரவாத ஓய்வூதியம்
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு தொழிலாளர்களும் 60 வயதை எட்டிய பிறகு அவர்கள் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் பெறுவார்கள். மேலும் ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தால், அந்த தொழிலாளியின் மனைவிக்கு ரூ.1500 ஓய்வூதியம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் இணைய, மொபைல் போன் எண், சேமிப்பு வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவை அவசியம். மேலும் இந்தத் திட்டத்தில் 30 வயதான தம்பதி ஒருவர் மாதம் ரூ.100 சேமித்தால் அவருக்கு 60 வயது பூர்த்தியான பின்பு ரூ.36 ஆயிரம் ஆண்டு ஓய்வூதியாக வழங்கப்படும். அவர் வருடம் ரூ.1200 வீதம் சேமித்து இருப்பார்.
அதேபோல் ரூ.200 செலுத்தினால் அவருக்கு ஆண்டுக்கு ஓய்வூதியம் ரூ.72 ஆயிரம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஓய்வூதியம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us