Chequebook without Visiting Bank : வங்கிகளுக்கு சென்று ஃபார்ம் எழுதி, வரிசையில் நின்று, ஆக வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டும் என்பது போல் ஒரு காரியம் உலகிலும் இருக்காது. பல நேரங்களில் கம்ப்யூட்டர் பிரச்சனை, அது பிரச்சனை, இது பிரச்சனை என்று கூறி நம்முடைய சோதனையை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்குவது இந்த வங்கிகள் தான். அதில் இருந்து எஸ்கேப் ஆக எத்தனையோ வழிமுறைகள் வந்தாலும், இன்றும் செக் புக் வாங்க க்யூவில் நிற்க வேண்டி உள்ளது. அதில் இருந்தும் எஸ்கேப் ஆக வந்துவிட்டது புதிய வழிமுறை.
உங்கள் வங்கிக் கிளையில் இருந்து செக் புக்கினை விரைவில் பெற்றுவிட ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. அதனை நீங்கள் பின்பற்றினால், உங்களின் வீடு தேடி உங்களின் செக்புக் வந்துவிடும்.
ஏ.டி.எம். மிஷனில் எப்படி அப்ளை செய்வது?
உங்களுக்கு அருகே இருக்கும் உங்கள் வங்கியின் எடிஎம்மிற்கு செல்லுங்கள். உங்களின் டெபிட் கார்டை உள்ளீடாக செலுத்திய பிறகு, உங்களின் சீக்ரெட் எண்ணை எழுத்தவும்.
திரையில் வரும் மோர் ஆப்சனை க்ளிக் செய்தால், சர்வீஸ் என்ற திரை ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் செக்புக் ரெக்வஸ்ட்டினை தேர்வு செய்துகொள்ளலாம்.
உங்களுக்கு எத்தனை செக்லீஃப்கள் வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதனை தேர்வு செய்து ரெக்வக்ஸ்ட் கொடுத்தால் மூன்று அல்லது நான்கு வேலை நாட்களில் உங்களின் முகவரிக்கு வந்துவிடும்.
இன்டர்நெட் பேங்கிங் மூலமாக செக்புக்கினை பெறுவது எப்படி ?
உங்கள் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் பகுதியில் லாக் இன் செய்து க்கொள்ளுங்கள்.
அதில் ப்ராடக்ட் அண்ட் சர்வீசஸ் அல்லது கஸ்டமர் சர்வீசின் கீழ் செக்புக் ரெக்வஸ்ட் அஎன்ற ஆப்சன் இருக்கும்.
அதிலும் உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லீஃப்லெட்டை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பின் சப்மிட் செய்ய மூன்று அல்லது நான்கு வேளை நாட்களில் உங்களுக்கு உங்களின் செக்புக் கிடைத்துவிடும்.
எஸ்.எம்.எஸ் மூலமாக அறிந்திட
உங்கள் வங்கியின் இலவச உதவி எண் (Toll Free) நம்பரை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலமாக நீங்கள் செக்புக்கினை இன்னும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
REG account number - டைப் செய்து அந்த டோல்ஃபிரி எண்ணுக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கான செக்புக் கிடைத்துவிடும். ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரியான உள்ளீடுகள் இருக்கலாம்.
மொபைல் பேங்கிங் வழியாக பெற்றிட
மொபைல் ஆப்பில் லாக்-இன் செய்து கொள்ளுங்கள்
சர்வீஸ்களின் கீழ், செக்புக் சர்வீஸ்கள் இருக்கும் . அதன் கீழ் இருக்கும் இஸ்ஸூயூ செக் புக் என்ற ஆப்சனை ( Issue Cheque Book ) தேர்வு செய்து கொள்ளவும். பின்பு உங்களுக்கு எத்தனை லீஃப்லெட்கள் வேண்டுமோ அதை பெற்றுக் கொள்ளலாம்.
இதனை ரெஜிஸ்டர் செய்த மூன்று நாட்களுக்குள் உங்களின் செக்புக் உங்களின் கைக்கு வந்துவிடும்.
மேலும் படிக்க : வீட்டுக் கடன் வட்டி: இரு முக்கிய வங்கிகளின் சலுகை என்ன தெரியுமா?