/tamil-ie/media/media_files/uploads/2023/08/IT-tax.jpg)
ஒருவர் முத்திரைத்தாள் வரி செலுத்தி சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அவரது மகளுக்கு பரிசாக அளித்துள்ளார். இதற்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எனினும் இதற்கு இந்திய இந்திய வருமான வரிச் சட்டத்தில் வரி விலக்கு பெறலாம்.
இந்திய வருமான வரிச் சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் பரிசுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது, ஏனெனில் அவை "குறிப்பிட்ட உறவினர்களின்" (specified relatives) பரிசுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
இதை செய்ய, முதலில் வரிமான வரித்துறை இணையப் பக்கம் சென்று ‘Pending Actions’ செல்லவும்.
அடுத்து Response to Outstanding Demands என்பதை கிளிக் செய்து Disagree with Demand செலக்ட் செய்யவும்.
இப்போது வரி விலக்குக்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். இதை செய்த பின், பரிசு குறித்தான ஆவணங்களை வழங்க வேண்டும். இதன் பின் வருமான வரித்துறை உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.