மிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI

SBI Loan with low interest: எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச ஆவணங்கள் விரைவான ஒப்புதலுடன் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடனடியாக கடன் தேவைப்படுபவர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் என்கிற இந்த திட்டத்தில் திருமணத்திற்கோ அல்லது விடுமுறைக்கோ அவசரத் தேவைக்கோ பணம் தேவையென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதலை பெற முடியும். மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கடனின் சிறப்பு அம்சங்கள்

*ரூ .20 லட்சம் வரை கடன்
*குறைந்த வட்டி விகிதங்கள்
*பிராசசிங் கட்டணம் குறைவு
*குறைந்த பட்ச ஆவணங்கள்
*செக்யூரிட்டி தேவையில்லை

மேலும், எஸ்எம்எஸ் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைன் எண்ணில் இருந்து PERSONAL என டைப் செய்து 7208933145 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

மிஸ்டுகால் மூலம் கடனைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அல்லது எஸ்பிஐ தொடர்பு மையம் மூலம் விண்ணப்பிக்க 1800-11-2211 ஐ டயல் செய்யலாம்.

மேலும், எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் பற்றிய கூடுதல் தகவலுக்கு bit.ly/37fnHhp இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Give a missed to get 20 lakh loan with low interest rate in sbi

Next Story
வீட்டில் இருந்தபடி 3 நிமிடங்களில் ரூ50000 கடன்: ஆவணங்கள் இல்லாமல் வழங்கும் SBI
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express