/tamil-ie/media/media_files/uploads/2022/12/mkt-1.webp)
கடந்த வாரம் சென்செக்ஸ் 843.86 புள்ளிகள் அல்லது 1.36 சதவீதம் சரிந்தது, நிஃப்டி 227.60 புள்ளிகள் அல்லது 1.23 சதவீதம் சரிந்தது.
உள்நாட்டு பங்குச் சந்தை இந்த வாரம் உலகளாவிய போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வர்த்தக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் எந்த குறிப்பிடத்தக்க குறிப்புகள் எதையும் கொண்டு வராது.
ஆகையால், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே ஒரு சண்டையை நாம் காணலாம். ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க சந்தை தற்போது விற்பனையின் இரண்டாவது அலையை அனுபவிக்கிறது. இதனால், அதன் திசை தொடர்ந்து முக்கியமானதாக கருதப்படும்.
மேலும், டிசம்பரில் கணிசமான எஃப்ஐஐகள் நிகர விற்பனையாளர்களாக இருந்ததால், நிறுவன ஓட்டங்கள் மற்றொரு முக்கியமான தூண்டுதலாக இருக்கும்" என்று ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் லிமிடெட் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா கூறினார்.
மேலும், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் Bank of England (BoE) போன்ற உலகளாவிய மத்திய வங்கிகள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை விகிதங்களை அதிகரிப்பதில் பின்தொடர்ந்தன. இதனால், கடந்த வாரம் உலகளவில் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
இந்த நிலையில், கடந்த வாரம் சென்செக்ஸ் 843.86 புள்ளிகள் அல்லது 1.36 சதவீதம் சரிந்தது, நிஃப்டி 227.60 புள்ளிகள் அல்லது 1.23 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.