Advertisment

Go Air: சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவித்த கோ ஏர்!

Go Air News: திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ .6,999.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Go Air, Go Air Singapore Flight

Go Air New International Flights: பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு இடைவிடாத விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கோ ஏர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு டெல்லி, சண்டிகர், லக்னோ மற்றும் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் லக்னோ, கொல்கத்தா மற்றும் கெளஹாத்தி, சண்டிகர் மற்றும் அகமதாபாத் இடையே இடைவிடாத விமான சேவைகளையும் தொடங்கியுள்ளது.

Advertisment

கோ ஏர், விமான சேவையை பெங்களூரு-சிங்கப்பூர்-பெங்களூரு வழித் தடத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கும். இதன் கமர்ஷியல் ஆபரேஷன் அக்டோபர் 18, 2019 அன்று தொடங்கும். கொல்கத்தா-சிங்கப்பூர்-கொல்கத்தா பாதையில் விமான சேவையை, வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துகிறது கோ ஏர். வரும் அக்டோபர் 19 முதல் இந்த விமானம், வணிக நடவடிக்கைகளைத் தொடங்கும். சிங்கப்பூரில், கோ ஏர் 8-வது சர்வதேச இடத்தில் இருக்கிறது.  மிசோராமில் உள்ள ஐஸ்வாலில் 25-வது இடம்.

விமான எண் 6827 பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (பி.எல்.ஆர்) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூரின்  சங்காய் விமான நிலையத்தை அதிகாலை 3.20 மணிக்கு அடையும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ .6,999. விமான எண் ஜி-828 சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு பெங்களூரை வந்தடையும். திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ .8,999.

விமானம் ஜி-835 சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.35 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இந்த விமானம் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கிடைக்கும். இதன் கட்டணம் ரூ .6,999. விமான எண் ஜி-836 சிங்கப்பூரிலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6.25 மணிக்கு கொல்கத்தா சென்றடையும். புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம். இதற்கான  கட்டணம் ரூ .7,499.

டெல்லி மற்றும் சண்டிகர் இடையேயான கோ-ஏர் விமானங்களுக்கான கட்டணம் ரூ.1707 முதல் தொடங்குகிறது. லக்னோவிற்கும் அகமதாபாத்திற்கும் இடையிலான கட்டணம் ரூ.2487 ஆகும். கொல்கத்தா மற்றும் லக்னோ இடையே தினசரி ரூ. 2010 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். சண்டிகர் மற்றும் அகமதாபாத் இடையே இரண்டு கூடுதல் விமானங்கள் இருக்கின்றன. இதன் கட்டணங்கள் 3074 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.

Airlines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment