/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-06-29T111955.475.webp)
Gold Silver Price in Delhi, Chennai - 03rd November
Gold, Silver Rates Today News Updates in Tamil,3rd November: எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்:
இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 37,480 ஆக உள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 40,880 ஆக உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை சீராக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 58,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,715 ஆகவும், சவரனுக்கு ரூ.37,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,144 என சவரனுக்கு ரூ. 41,152 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.64,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.