தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து விற்பனை ஆகிவருகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.77.70 காசுகளாக உள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது 20 காசுகள் உயர்வாகும்.
வெள்ளி விலை
தங்கம், வெள்ளி விலைகள் 2024 ஜனவரி மாதத்தில் ஏற்ற- இறக்கத்துடன் காணப்படுகின்றன. வெள்ளியை பொறுத்தமட்டில் ஜன.20ஆம் தேதிக்கு பின்னர் தொடர் உயர்வை கண்டுவருகிறது.
ஜன.20ஆம் தேதி கிராம் வெள்ளி ரூ.77 ஆக இருந்த நிலையில், இன்று (ஜன.29,2024) 77.70 காசுகளாக உள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.77 ஆயிரத்து 770 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது உச்சப்பட்சமாக ஜன.26ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.78 வரை உயர்ந்தது. அதாவது கிலோ வெள்ளி ரூ.78,000க்கு விற்பனை ஆனது.
தங்கம் விலை
சென்னையில் கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5845 ஆகவும் 24 காரட் தங்கம் கிராம் ரூ.6315 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.5ம், சவரனுக்கு ரூ.40ம் அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“